கிணற்றை காணவில்லை என முறைப்பாடு : வவுனியா நகரில் சம்பவம்

Published By: MD.Lucias

06 Jan, 2017 | 04:27 PM
image

சதீஸ் 
வவுனியா நகரின் மத்தியிலுள்ள இராணுவத் தளபதி கொப்பாகடுவவின் சிலைக்கு முன்பாக அமைக்கப்பட்டிருந்த குழாய்கிணறு ஒன்றை சில வருடங்களாக காணவில்லையென வவுனியா நகரசபை செயலாளரான  ஆர்.தயாபரனிடம் சமூக நலன்விரும்பி ஒருவரால் முறைப்பாடொன்று முன்வைக்கப்பட்டுள்ளது.

இவ் விடயம் தொடர்பாக தெரியவருவதாவது,

கடந்த பல வருடங்களுக்கு முன்பு வவுனியா நகரசபையினால் பொதுமக்கள் பாவனைக்காக வவுனியா நகரின் மத்தியிலுள்ள இராணுவ தளபதி கொப்பாகடுவ சிலைக்கருகில் குழாய்க்கிணறு ஒன்று அமைக்கப்பட்டிருந்தது.  காலப்போக்கில் அந்த கிணறு இருந்த இடமே தெரியாமல் போய்விட்டது.

இவ் விடயம் தொடர்பாக  நகரசபை செயலாளரை தொடர்பு கொண்ட பொழுது சம்பவம் உண்மையென்றும் இதன் அருகிலிருக்கும் வியாபார நிலையங்களில் யாரேனும் ஒருவர் இதனை இரகசிய முறையில் பாவிக்கின்றார்களா? என்ற சந்தேகம் கொள்வதாகவும் எனினும் இது சட்டவிரோத குற்றமெனவும் தாம் இதற்குரிய சட்ட நடவடிக்கையை உடனடியாக மேற்கொள்வதாகவும் தெரிவித்தார்.

எது எவ்வாறாயினும் பொதுமக்களின் தாகத்தை தீர்ப்பதற்காக அரசாங்கத்தால் அமைக்கப்பட்ட குழாய்கிணற்றை மறைத்து  தமது சொந்த பாவனைக்கு பயன்படுத்துபவர்கள் மீது உடனடி நடவடிக்கைகளை மேற்கொண்டு தகுந்த தண்டனை பெற்றுக்கொடுப்பதுடன் நஷ்ட ஈட்டையும் பெற்றுக்கொள்ள வேண்டுமென முறையிட்டவர் தெரிவித்துள்ளார்.

 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சுங்கத் திணைக்கள அதிகாரிகளின் சட்டப்படி வேலை...

2024-03-19 14:30:11
news-image

கட்டுநாயக்கவிலிருந்து புறப்பட்ட விமானம் மீண்டும் தரையிறக்கம்!

2024-03-19 14:13:26
news-image

ஹெரோயின் போதைப் பொருளுடன் ஒருவர் கைது

2024-03-19 14:18:01
news-image

அவுஸ்ரேலிய பாதுகாப்பு அதிகாரிகள் குழு யாழ்.பல்கலைக்கு...

2024-03-19 14:04:31
news-image

பொது மக்கள் எங்கும் தீ வைக்க...

2024-03-19 13:41:34
news-image

யாழில் கல்லூரி வீதிக்கு ரயில் கடவை...

2024-03-19 12:58:21
news-image

பாதாள உலக நடவடிக்கைகளை ஒடுக்க 20...

2024-03-19 12:43:19
news-image

இந்தியாவிலிருந்து முட்டைகளை இறக்குமதி செய்ய அமைச்சரவை...

2024-03-19 12:38:07
news-image

தகாத உறவினால் பிறந்த குழந்தையைக் கொன்ற...

2024-03-19 12:11:22
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-19 12:09:35
news-image

போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட பெண் கைது!

2024-03-19 11:57:01
news-image

வெடுக்குநாறிமலையில் கைதான 8 பேரும் விடுதலை...

2024-03-19 11:21:15