உலுக்குளம கிராமத்திற்கு குடிநீர் சுத்திகரிப்பு நிலையம், குடிநீர் விநியோகத் திட்டம் சிங்கர் நிறுவனத்தால் நன்கொடை

Published By: Priyatharshan

06 Jan, 2017 | 01:03 PM
image

வீட்டுப்பாவனை மற்றும் மின்சார சாதனங்களின் விற்பனையில் நாட்டில் முன்னிலை வகித்துவருகின்ற ஒரு வர்த்தகநாமமான சிங்கர் ஸ்ரீலங்கா பீஎல்சி CKD எனப்படுகின்ற சிறுநீரக வியாதியை இல்லாதொழிப்பதற்கு மேற்கொண்டுவருகின்ற பங்களிப்புக்களின் சமீபத்தைய முயற்சியாக, அனுராதபுரம் மாவட்டத்திலுள்ள உலுக்குளம என்ற கிராமத்திற்கு குடிநீர் சுத்திகரிப்பு நிலையமொன்றை நன்கொடையளித்துள்ளது.

ஹேலீஸ் குழுமத்தின் Puritas நிறுவனத்தின் தொழில்நுட்ப நிபுணத்துவம் மற்றும் நீர்வழங்கல் சபையின் வழிகாட்டலின் கீழ் அவற்றுடன் இணைந்து இச்செயற்திட்டத்தை முன்னெடுப்பதற்கு ரூயஅp;பா 4 மில்லியன் தொகையை சிங்கர் ஸ்ரீலங்கா உதவித்தொகையாக வழங்கியுள்ளது.

உலுக்குளம கிராமத்தில் வசிக்கின்ற 1,600 இற்கும் மேற்பட்ட மக்களுக்கு சுத்தமான குடிநீரை வழங்கி, அவர்கள் மத்தியில் நம்பிக்கையை ஏற்படுத்தும் வகையில் Reverse Osmosis plant என தொழில்நுட்பரீதியாக அறியப்படுகிள்ற குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தை அமைப்பதற்கு சிங்கர் நிறுவனம் முன்வந்ததுடன் ஹேலீஸ் குழுமத்தின் அங்கமான Puritas Pvt Ltd நிறுவனத்துடன் இணைந்து கூட்டாக இதனை முன்னெடுப்பதற்கு அனுராதபுரம் மாவட்டத்தில் CKD எனப்படுகின்ற சிறுநீரக வியாதியால் பாதிக்கப்பட்டுள்ள உலுக்குளம கிராமத்தை தெரிவு செய்திருந்தது.

சிங்கர் ஸ்ரீலங்கா பீஎல்சி குழும பிரதம நிறைவேற்று அதிகாரியான அசோக பீரிஸ், உலுக்குளம கிராமத்தில் இந்த குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தை திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டார்.

இந்நிகழ்வில் உரையாற்றிய அவர், “எமது தேசத்தின் ஒரு பகுதியை ஆட்டிப்படைக்கும் ஊமுனு என்ற சிறுநீரக வியாதியின் தீவிரத்தை நாம் இனங்கண்டுள்ளோம். இப்புதிய குடிநீர் சுத்திகரிப்பு நிலையமானது இச்சமூகத்திலுள்ள மக்களுக்கு சுத்தமான குடிநீரை வழங்கி, இவ்வியாதியால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் அதிலிருந்து விரைவாக குணமடைவதற்கும் உதவுமென நாம் நம்புகின்றோம். இதன் தீவிரமான விளைவுகளை ஏனைய நிறுவனங்களும் அறிந்துகொண்டுரூபவ் எமது முயற்சியைப் பின்பற்றி, CKD எனப்படுகின்ற சிறுநீரக வியாதியால் பாதிக்கப்பட்டுள்ள மக்களின் வாழ்வை சிறப்பிப்பதற்கு இத்தகைய முயற்சிகளை தொடர்ந்தும் முன்னெடுப்பதற்கு இச்செயற்திட்டம் வழிகோலுமெனவும் நாம் நம்பிக்கை கொண்டுள்ளோம்” என்று குறிப்பிட்டார்.

புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள இந்த குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் மற்றும் அதன் விநியோகத் திட்டமானது, அக்கிராமத்தில் தெரிவுசெய்யப்பட்ட ஒன்பது (09) இடங்களில் குடிநீர் விநியோக மையங்களைக் கொண்டுள்ளதுடன் அவற்றின் மூலமாக அங்கு வசிப்போர் சுத்திகரிக்கப்பட்ட குடிநீரை மிகவும் சௌகரியமாகப் பெற்றுக்கொள்ள முடியும்.

இந்த சுத்திகரிப்பு நிலையத்தின் மூலமாகரூபவ் தினசரி 10,000 லீட்டர் குடிநீர் விநியோகிக்கப்படுவதுடன்ரூபவ் அங்கு வசிப்போருக்கு லீட்டர் ஒன்று ஒரு ரூபா என்ற விலையில் குடிநீர் விற்பனை செய்யப்படுகின்றது. இதன் மூலமாகச் சேகரிக்கப்படுகின்ற நிதி இந்த குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தைப் பேணவும்ரூபவ் எதிர்காலத்தில் தேவைப்படுகின்ற வேறு மேம்பாட்டு நடவடிக்கைகளுக்கும் பயன்படுத்தப்படும்.

வட மேல் மாகாணத்திலும் அதனைச் சூழவுள்ள பிரதேசங்களிலும்ரூபவ் அண்மையில் முன்னெடுக்கப்பட்டிருந்த பல்வேறு ஆராய்ச்சிகளின் அடிப்படையில், சுத்திகரிக்கப்படாத குடிநீரை அருந்துவதாலேயே அங்கு வசிப்பவர்கள் CKD எனப்படுகின்ற சிறுநீரக வியாதியின் பாதிப்பிற்கு உள்ளாகின்றனர் என கண்டறியப்பட்டுள்ளது.

இக்கிராமத்தில் வசித்துவருகின்ற 1,600 பேரில் 65 பேர் CKD வியாதியின் அறிகுறிகளைக் கொண்டுள்ளதாக இனங்காணப்பட்டுள்ளனர். அனுராதபுரம் மாவட்டத்திலும்ரூபவ் அதனைச் சூழவுள்ள பிரதேசங்களிலும் வசிக்கின்ற 400,000 வரையான மக்கள் CKD எனப்படுகின்ற சிறுநீரக வியாதியின் நேரடிப் பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளதாக பதிவுகள் காண்பிக்கின்றன. குடிநீரினால் ஏற்படுகின்ற வியாதியென கண்டறியப்பட்டுள்ள CKD இன் பாதிப்பினால் இது வரை 25,000 பேர் ஏற்கனவே உயிரிழந்துள்ளதாகவும் புள்ளிவிபரங்கள் காண்பிக்கின்றன.

குடிநீர் பழக்கவழக்கத்தில் மாற்றங்களை மேற்கொள்ளும் பட்சத்தில் CKD இனால் ஏற்கனவே பாதிக்கப்பட்டுள்ளவர்களில் 15 வீத வரையானோர் படிப்படியாக குணமடைவதற்கு வாய்ப்புள்ளதாக விரிவான ஆய்வுகள் மற்றும் சோதனைகள் மூலமாகக் கண்டறியப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்டுள்ள பிரதேசங்களில் சுத்தமான குடிநீருக்கு பாரிய தேவை காணப்படுகின்ற நிலையில், இலங்கையில் CKD இனை இல்லாதொழிக்கும் முயற்சியை விரைவுபடுத்துவதற்கு உதவுவதற்காக உதவிக்கரங்களை நீட்டுவதற்கு சிங்கர் முன்வந்துள்ளது. 2016 ஆம் ஆண்டின் நடுப்பகுதியில், சிங்கர் ‘Thirst for Life’ (வாழ்விற்கான தேடல்) ஆரோக்கியம் மற்றும் நலன் நிலைபேண் செயற்திட்டத்தின் கீழ் ரூபா 7.5 மில்லியன் பெறுமதியான மூன்று CRRT (Continuous Renal Replacement Therapy - தொடர் சிறுநீரக மாற்றுச் சிகிச்சை) இயந்திரங்களை தேசிய வைத்தியசாலைக்கு சிங்கர் நன்கொடையாக வழங்கியிருந்ததுடன், CKD இனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்காக நன்கொடையாக இதுவரை மொத்தமாக ஆறு இயந்திரங்களை நன்கொடையளித்துள்ளது.

பல இலட்சக்கணக்கான இலங்கை மக்களை அன்றாடம் எட்டி, கல்வி, விளையாட்டுரூபவ் சுகாதாரப் பராமரிப்பு மற்றும் சூழலைப் பாதுகாத்தல் மற்றும் வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்தும் ஏனைய பல்வேறு சமூகச் செயற்பாடுகள் மூலமாக அவர்களின் வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்தும் முயற்சியை மேற்கொள்ளும் நிறுவனங்களுள் முன்னிலை வகிக்கின்ற ஒரு நிறுவனமாக சிங்கர் தொடர்ந்தும் செயற்பட்டு வருகின்றது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

Yamaha மோட்டார் சைக்கிள்கள், ஸ்கூட்டர்களுக்காக பிரத்தியேகமாக...

2024-03-28 10:39:07
news-image

Samsung Sri Lanka ஆனது 35%...

2024-03-27 10:43:06
news-image

பருக்களுக்கு விடைகொடுத்திடும் : பியுரிஃபைங் நீம்...

2024-03-27 10:19:07
news-image

கார்கில்ஸ் நிறுவனமானது பிளாஸ்டிக் மாசுபாட்டிற்கு எதிரான...

2024-03-27 10:17:41
news-image

SampathCards உடன் இணைந்து  0% வட்டி...

2024-03-20 02:18:01
news-image

பெண்களுக்கு அதிகாரமளித்தல், சமூகங்கள் மத்தியில் மாற்றத்தை...

2024-03-20 02:13:22
news-image

2023ம் ஆண்டின் நாலாம் காலாண்டில் குறிப்பிடத்தக்க...

2024-03-20 02:05:24
news-image

Francophonie 2024 – மார்க் அய்மன்...

2024-03-18 15:26:06
news-image

சியபத பினான்ஸ் பிஎல்சீ, பதுளை ஸ்ரீ...

2024-03-18 14:49:36
news-image

9 ஆவது வருடமாக கொழும்பு பங்குசந்தை...

2024-03-14 21:40:35
news-image

கொரியன் எயார்லைன்ஸுடன் கைகோர்க்கும் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ்

2024-03-14 21:46:34
news-image

சர்வதேச மகளிர் தினத்தை கொண்டாடிய மக்கள்...

2024-03-12 11:20:57