தேசத்தின் நம்பிக்கை மிகுந்த வணிக ரீதியான வனவளர்ப்பு நிறுவனமான சதாஹரிதரூபவ் அண்மையில் இடம்பெற்ற சுவர்ணதீப 2016 விருதுகள் விழாவில் தங்க விருதை வென்றெடுத்துள்ளது.

இலங்கை மக்கள் தொடர்பாளர்கள் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நிகழ்வின் இவ்வருடத்திற்கான தொனிப்பொருளாக ‘சுற்றுச்சூழல் எமது வாழ்வாகும்” என அமைந்திருந்தது.

இந்நாட்டு மக்களுக்காக ஸ்திரமான ஜீவனோபாயத்தை அறிமுகம் செய்து எதிர்கால சந்ததியினருக்கான சுற்றுச்சூழலை பாதுகாப்பதற்காக சதாஹரித வழங்கிய பங்களிப்பு இவ்விருது ஊடாக கௌரவிக்கப்பட்டது.

விருதுகள் தேர்ந்தெடுத்தமை குறித்து தேசிய இலங்கை மக்கள் தொடர்பாளர்கள் சங்கத்தின் தலைவர் சுனில் ஆர்.விஜயகோன், அகர்வூட் உட்பட வணிக ரீதியான பயிர்களை இந்நாட்டில் அறிமுகம் செய்வதனூடாக சதாஹரித நிறுவனம்ரூபவ் இந்நாட்டின் வனவளர்ப்பு துறைக்கு பெரும் பங்களிப்பு வழங்கி வருகிறது.

இலங்கை மக்கள் தொடர்பாளர்கள் சங்கம் போன்ற சுயாதீன அமைப்பிடமிருந்து இத்தகைய கீர்த்திமிக்க விருதை வென்றமையிட்டு நாம் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம். இலங்கையின் சமூக பொருளாதார ஸ்திரத்தன்மை மற்றும் வனவளர்ப்பு துறை மேம்பாட்டுக்கு நாம் வழங்கி வரும் பங்களிப்பு இவ்விருது ஊடாக அங்கீகரிக்கப்பட்டுள்ளதை தாம் நம்புவதாக சதாஹரித நிறுவனத்தின் சந்தைப்படுத்தல் பணிப்பாளர் ஜயம்பதி மிரண்டோ குறிப்பிட்டார்.