அமெரிக்க கடற்படையில், முதன்முதலாக மூன்று பெண் வீராங்கனைகள் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளனர்.

(தரப்பட்டிருப்பது மாதிரி படமே)

இதுவரை காலமும் ஆண்களுக்காக மட்டுமே ஒதுக்கப்பட்டிருந்த கடற்படையின் ஆயுதப் படையிலேயே இவர்கள் சேர்த்துக்கொள்ளப்பட்டுள்ளனர். அதில் மேற்படி மூன்று பெண்களும் ரைபிள், இயந்திரத் துப்பாக்கி மற்றும் எறிகணைகளை இயக்கும் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர்.

ஆபத்துக்கள் நிறைந்த கொமாண்டோ பிரிவு உட்பட, அனைத்து இராணுவப் பணிகளிலும் பெண்களும் சேர்த்துக்கொள்ளப்பட வேண்டும் என 2015ஆம் ஆண்டு அமெரிக்க பாதுகாப்புச் செயலாளர் ஆஷ் கார்ட்டர் விடுத்த வேண்டுகோளுக்கு இசைவாகவே இந்தப் பணி நியமனம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பணியில் சேர்த்துக்கொள்ளப்பட்டவர்களது பெயர், விபரம், புகைப்படங்கள் இதுவரை வெளியிடப்படவில்லை.