டயலொக் சம்­பியன்ஸ் லீக் கால்­பந்­தாட்டத் தொடரின் சுப்பர் –8 சுற்று போட்­டிகள் இன்று ஆரம்பமாகின்றன.நீண்ட இழு­ப­றியில் இருந்த இந்தத் தொடரின் கடைசி போட்டி கடந்த வரு டம் செப்­டெம்பர் மாதம் நடைபெற்றது.

அதைத் தொடர்ந்து கிட் ­டத்­தட்ட மூன்று மாதங்­க­ளுக்கு பிறகு மீண்டும் தொடரின் சுப்பர் – 8 சுற்­றுகள் ஆரம்­ப­மா­க­வுள்­ளன.மலேஷியாவில் நடை­பெற்ற ஒற்­று­மைக்­கிண்ணக் கால்­பந்­தாட்டத் தொடரில் இலங்கை அணி பங்­கேற்­றி­ருந்­தது.

மலே­ஷியா சென்ற இலங்கைக் கால்­பந்­தாட்ட தேசிய அணியில் இடம்­பெற்­றி­ருந்த பல வீரர்கள் டயலொக் சம்­பியன்ஸ் லீக் தொடரின் சுப்பர் –8 சுற்றில் விளை­யாடும் கழ­கங்­களின் வீரர்­க­ளாக இருந்­த­மை­யினால்  போட்­டிகள் நவம்பர் மாதத்­திற்கு ஒத்­தி­வைக்­கப்­பட்­டன.

எனினும் நவம்பர் மாதத்தில் நில­விய சீரற்ற கால­நிலை கார­ண­மாக மீண்டும் போட்­டி­களை ஆரம்­பிக்க முடி­யாத நிலை ஏற்­பட்­டது.அதைத் தொடர்ந்து இலங்கை கால்­பந்து சம்­மே­ளனம் சுப்பர் – 8 சுற்றின் இரண்டாம் வாரத்­திற்­கான போட்­டி­களை இவ்­வ­ருடம் ஜன­வரி மாதம் வரை ஒத்­தி­வைத்­தது.

அதன்படி இன்று இந்தப் போட்டிகள் மீண்டும் ஆரம்பமாகின்றன. இன்றைய போட்டியில் ப்ளூஸ்டார் அணியும் – விமானப் படை அணியும் மோதுகின்றன.