லிந்துலை - பெலார்வெல்  தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்த தொழிலாளர்கள் மீது குளவி தாக்குதல் மேற்கொண்டமையினால் 17 பேர் காயமடைந்த நிலையில் லிந்துல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இவர்களில் ஏழு பேர் சிகிச்சையின் பின் வீடு திரும்பிய போதிலும் எஞ்சிய 10 பேரும் வைத்தியசாலையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருவதாக லிந்துலை வைத்தியசாலை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.