இடைக்­கால அறிக்கை சமர்ப்­பிப்­பதில் தாமதம்.!

Published By: Robert

06 Jan, 2017 | 10:14 AM
image

எதிர்வரும் 9,10,11ஆம் திக­தி­களில் நடை­பெற­வி­ருந்த அர­சி­ய­ல­மைப்பு சபையின் உப குழுக்களின் அறிக்­கைகள் மீதான விவா­தத்தை நடத்­து­வ­தில்லை என வழி­ந­டத்­தல்­குழுக் கூட்­டத்தில் தீர்­மா­னிக்­கப்­பட்டுள்­ளது. 

அத்­துடன் வழி­ந­டத்தல் குழுவின் இடைக்­கால அறிக்­கை­யுடன் இணைத்தே உப­கு­ழுக்­களின் அறிக்­கைகள் மீதான விவா­தத்தை நடத்­து­வ­தெ­னவும் அதற்­கு­ரிய பொருத்­த­மான காலத்தை தீர்­மா­னிப்­ப­தற்­காக மீண்டும் இம்­மாதம் மூன்றாம் வாரத்தில் கூடு­வ­தெ­னவும் முடி­வெ­டுக்­கப்­பட்­டுள்­ளது. புதிய அர­சி­ய­ல­மைப்பை வரை­வ­தற்­காக அர­சி­ய­ல­மைப்பு சபை­யினால்  பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க தலை­மையில் அனைத்­துக்­கட்­சி­க­ளையும் உள்­ள­டக்­கி­ய­வாறு நிய­மிக்­கப்­பட்ட 21உறுப்­பி­னர்கள் கொண்ட வழி­ந­டத்தல் குழு நேற்று காலை 10.30மணிக்கு பாரா­ளு­மன்ற கட்­ட­டத்­தொ­கு­தியில் கூடி­யது. இதன்­போதே மேற்­கண்­ட­வாறு தீர்­மா­னங்கள் எடுக்­கப்­பட்­டுள்­ளது. 

அக்­கூட்டம் தொடர்பில் மேலும் தெரி­ய­வ­ரு­வ­தா­வது, 

வழி­ந­டத்தல் குழு­வினால் அடிப்­படை உரி­மைகள், நீதித்­துறை, சட்டம் மற்றும் ஒழுங்கு, பொது நிதி, பொதுச் சேவை, மற்றும் மத்­திய அர­சாங்கம், மாகாண சபை­க­ளுக்­கி­டை­யி­லான தொடர்பு ஆகிய ஆறு விட­யங்­க­ளையும் கையாள்­வ­தற்­காக தனித்­த­னி­யான உப­கு­ழுக்­களை நிய­மித்­தி­ருந்­தது. 

அந்த உப­கு­ழுக்கள் அறிக்­கை­களை சமர்ப்­பித்­தி­ருந்த நிலையில் அவ்­வ­றிக்­கைகள் தொடர்பில் எதிர்­வரும் 9,10,11ஆம் திக­தி­களில் விவாதம் நடத்­து­வ­தெ­னவும் 5,6ஆம் திக­தி­களில் வழி­ந­டத்தல் குழுவின்  இடைக்­கால அறிக்­கையை அர­சி­ய­ல­மைப்பு சபையில் சமர்ப்­பிப்­பது குறித்து ஏக தீர்­மா­னத்­திற்கு வரு­வ­தற்­காக வழி­ந­டத்தல் குழு கூடி ஆராயும் எனவும்  டிசம்பர் மாதம் 10ஆம் திகதி இடம்­பெற்ற அர­சி­ய­ல­மைப்பு சபை அமர்வின் போது தீர்­மா­னிக்­கப்­பட்­டி­ருந்­தது. 

இந்­நி­லை­யி­லேயே அர­சி­ய­ல­மைப்பின் வழி­ந­டத்தல் குழு­வா­னது பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவின் தலை­மையில் நேற்று கூடி­யி­ருந்­தது. இதன்­போது வழி­ந­டத்தல் குழவின் இடைக்­கால அறிக்­கையை எதிர்­வரும் 10ஆம் திகதி அர­சி­ய­ல­மைப்பு சபையில் சமர்ப்­பிப்­பது குறித்து ஆரா­யப்­பட்­டது. 

இதன்­போது ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணியின் சார்பில் கலந்­து­கொண்­டி­ருந்த அமைச்­சர்­க­ளான சுசில் பிரேம ஜெயந்த, நிமல்­சி­றி­பால டி சில்வா ஆகியோர் தமது பங்­கா­ளிக்­கட்­சி­க­ளுடன் இடைக்­கால அறிக்கை தொடர்­பாக கலந்­து­ரை­யாடி ஏக முடி­வொன்று இது­வ­ரையில் எட்­டப்­ப­ட­வில்லை. ஆகவே அதற்­காக மேலும் கால அவ­காசம் வழங்­கு­மாறு கோரி­யி­ருந்­தனர்.

இதே­க­ருத்­தையே ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணியின் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னரும் கூட்டு எதி­ர­ணியின் தலை­வ­ரு­மான தினேஷ்­கு­ண­வர்த்­த­னவும் வலி­யு­றுத்­தினார். குறிப்­பாக அவ­ச­ரப்­பட்டு இடைக்­கால அறிக்­கையை சமர்ப்­பிக்­காது பொறு­மை­யாக ஆராய்ந்து அனைத்து விட­யங்­க­ளையும் உள்­ள­டக்­கிய பின்னர் அதனை சமர்ப்­பித்து விவா­திக்­கலாம் எனச் சுட்­டிக்­காட்­டி­யி­ருந்தார்.

இச்­ச­ம­யத்தில் குறிக்­கிட்ட தமிழ் முற்­போக்கு கூட்­ட­ணியின் தலைவர் மனோ கணேசன், தமிழ் முற்­போக்கு கூட்­ட­ணி­யி­ன­ரா­கிய நாமும், அமைச்சர் ரவூப் ஹக்கீம் தலை­மை­யி­லான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கிரஸ், அமைச்சர் ரிஷாட் பதி­யுதீன் தலை­மை­யி­லான அகில இலங்கை மக்கள் காங்­கிரஸ், டக்ளஸ் தேவா­னந்­தாவின் ஈழ­மக்கள் ஜன­நா­யக கட்சி ஆகிய நான்கு கட்­சி­களும் இணைந்து எமது நிலைப்­பா­டு­களை வெளிப்­ப­டுத்தும் வகையில் கூட்டு அறிக்­கை­யொன்றை வழி­ந­டத்தல் குழுவில் சமர்ப்­பிப்­ப­தாக தீர்­மா­னித்­தி­ருந்தோம் இருப்­பினும் அப்­ப­ணிகள் தொடர்ந்து கொண்­டி­ருப்­பதால் கால அவ­காசம் தேவை­யா­க­வுள்­ளது என்றார். 

இந்­நி­லையில் வழி­ந­டத்தல் குழுவின் இடைக்­கால அறிக்கை தொடர்­பாக அனைத்து கட்­சி­களின் பிர­தி­நி­தி­களின் ஏக­ம­ன­தாக இணக்­கப்­பாடு இன்றி அதனை அர­சி­ய­ல­மைப்புச் சபையில் சமர்ப்­பிக்க முடி­யாது. அதே­நேரம் இடைக்­கால அறிக்கை சமர்ப்­பிக்­கப்­ப­டாது வெறு­மனே உப­கு­ழுக்­களின் அறிக்­கைகள் தொடர்­பாக விவா­திப்­பதில் பய­னில்லை. ஆகவே இடைக்­கால அறிக்­கை­யையும் சமர்ப்­பித்து அத­னுடன் இணைத்தே உப­கு­ழுக்­களின் அறிக்­கைகள் மீதான விவா­தத்தை நடத்­து­வது பொருத்­த­மா­ன­தாக இருக்கும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் உள்ளிட்ட சில உறுப்பினர்களால் சுட்டிக்காட்டப்பட்டது.

இதனையடுத்து இடைக்கால அறிக்கையை சமர்ப்பிப்பதற்கான பொருத்தமான காலம் குறித்து தீர்மானிப்பதற்காக இம்மாதம் மூன்றாம் வாரத்தில் மீண்டும் வழிநடத்தல் குழு கூடுவதெனவும் 9, 10, 11ஆம் திகதிகளில் இடைக்கால அறிக்கைகள் குறித்த விவாதங்களை நடத்துவதில்லை எனவும் வழிநடத்தல் குழு அங்கத்தவர்களால் தீர்மானிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

பாலித தெவப்பெருமவின் பூத உடல் நல்லடக்கம்

2024-04-20 00:06:17
news-image

கடற்றொழிலாளர்களுக்கான புதிய சட்டமூல வரைபு தொடர்பாக...

2024-04-20 00:08:11