ஐ.தே.க. எம்.பிக்கள் நாளை கட்­டாயம் அம்­பாந்­தோட்­டைக்கு வருகை தர­வேண்டும் : பிர­தமர் உத்­த­ரவு

Published By: Robert

06 Jan, 2017 | 09:53 AM
image

15 ஆயிரம் ஏக்கர் காணி­களில் கைத்­தொழில் பேட்­டை­களை ஆரம்­பிக்கும் முத­லீட்டு வல­யத்­திற்­கான திறப்பு விழா­விற்கு நாளை7 ஆம் திகதி அனைத்து ஐக்­கிய தேசியக் கட்சி பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களும் கட்­டாயம் அம்­பாந்­தோட்­டைக்கு வருகை தர வர­வேண்டும் என பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க உத்­த­ர­விட்­டுள்ளார்.

அத்­துடன் அம்­பாந்­தோட்டை விவ­காரம் தொடர்பில் தவ­றான செய்­திகள் மக்கள் மத்­தியில் பரப்­­பப்­ப­டு­கின்ற நிலையில் இது தொடர்­பாக மக்கள் மத்­தியில் உண்மை நில­வ­ரத்தை தெளி­வு­ப­டுத்தும் நோக்கில் அகில விராஜ் காரி­ய­வசம் தலை­மையில் ஐக்­கிய தேசியக் கட்சி பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளுக்கு அறி­வு­றுத்தும் விசேட கூட்டம் நேற்­றைய தினம் நடத்­தப்­பட்­டது. அத்­துடன் இன்­றைய தினம் ஐக்­கிய தேசியக் கட்சி தொகுதி அமைப்­பா­ளர்­க­ளுக்கு தெளி­வு­ப­டுத்த திட்­ட­மி­டப்­பட்­டுள்­ளது. 

அம்­பாந்­தோட்டை முத­லீட்டு வலயம் மற்றும் துறை­முக விவ­காரம் தொடர்பில் தவ­றான கருத்­துக்­கள் மக்கள் மத்­தியில் பரப்­பப்­ப­டு­கின்­ற­மை­யினால் நேற்று பி.ப 2.30 மணிக்கு ஐக்­கிய தேசியக் கட்­சியின் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் மத்­தியில் தெளி­வு­றுத்­தப்­பட்­டுள்­ளது. கல்வி அமைச்சர் அகில விராஜ் காரி­ய­வசம் தலை­மையில் இந்த கூட்டம் நடை­பெற்­றுள்­ளது.

அத்­துடன் இன்­றைய தினம் ஐக்­கிய தேசியக் கட்­சியின் தொகுதி அமைப்­பா­ளர்­க­ளுக்கு இந்த விடயம் தொடர்பில் தெளி­வு­றுத்­தப்­ப­ட­வுள்­ள­தாக கல்வி அமைச்சர் அகில விராஜ் காரி­ய­வசம் கேச­ரிக்கு குறிப்­பிட்டார். இதே­வேளை நேற்று முன் தினம் நடை­பெற்ற ஐக்­கிய தேசியக் கட்­சியின் செயற்­குழு கூட்­டத்தின் போது அம்­பாந்­தோட்டை துறை­முகம் மற்றும் முத­லீட்டு வலயம் தொடர்பில் விசேட அவ­தானம் செலுத்­தப்­பட்­டுள்­ளது. 

இதன்­பி­ர­காரம் நான் ஐக்­கிய தேசியக் கட்சியின் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளுக்கு நாளை 7 ஆம் திகதி அம்பாந்தோட்டைக்கு கட்டாயம் வருகைதர வேண்டும் என உத்தரவிட்டதாக அலரிமாளிகையில் நடைபெற்ற நிகழ்வின்போது ஊடகவியலாளர்களிடம் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரி வித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அருட்தந்தை தந்தை சிறில் காமினி குற்றப்...

2024-04-19 11:03:22
news-image

நான்கு ரயில் சேவைகள் இரத்து!

2024-04-19 10:50:08
news-image

18,000 மில்லி லீட்டர் கோடா விஹாரையில்...

2024-04-19 10:45:18
news-image

விருந்துபசாரத்தில் வாக்குவாதம்: ஒருவர் தாக்கப்பட்டு உயிரிழப்பு!

2024-04-19 10:20:31
news-image

சில பகுதிகளில் 12 மணித்தியாலங்கள் நீர்...

2024-04-19 10:18:39
news-image

1991 ஆம் ஆண்டு ருமேனியாவில் இடம்பெற்ற...

2024-04-19 09:59:40
news-image

காசல்ரீ நீர்த்தேக்கத்தில் நீராடச் சென்ற மாணவன்...

2024-04-19 09:36:08
news-image

போதைபொருள் கடத்தல்களை இல்லாதொழிக்க சிறப்பு மோட்டார்...

2024-04-19 10:11:07
news-image

வெற்றிலை,பாக்கு விலை உயர்வு

2024-04-19 10:16:54
news-image

சிறுவர் இல்லங்களில் சிறுவர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி!

2024-04-19 09:00:44
news-image

போதைப்பொருள் கடத்தல்காரர்களுடன் நெருங்கிய தொடர்புகளை பேணிய...

2024-04-19 09:03:35
news-image

இன்றைய வானிலை 

2024-04-19 06:12:21