அம்பாந்தோட்டை துறைமுக உடன்படிக்கை  ஏழாம் திகதி கைச்சாத்திடப்பட மாட்டாது : ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அறிவிப்பு

05 Jan, 2017 | 05:49 PM
image

(எம்.சி.நஜிமுதீன்)

அம்பாந்தோட்டை துறைமுக உடன்படிக்கை  எதிர்வரும் ஏழாம் திகதி கைச்சாத்திடப்போவதில்லை. எனினும் அன்று அங்கு வைபவம் ஒன்று நடைபெறவுள்ளது. மேலும் அம்பாந்தோட்டை துறைமுக விவகாரம் தொடர்பில் புரிந்துணர்வு உடன்படிக்‍கை மாத்திரம் கைச்சாத்திடப்பட்டுள்ளது. வேறு எவ்வித உடன்படிககைகளும் இதுவரையில் கைச்சாத்திடப்படவில்லை. மேலும் குறித்த விடயம் தொடர்பில் அமைச்சரவை குழு ஒன்று நியமிக்கப்பட்டு அதனூடாகவே நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக அமைச்சர்  மஹிந்த அமரவீர தெரிவித்தார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஏற்பாடுசெய்த ஊடகவியலாளர் சந்திப்பு இன்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்றது.  அதில் கலந்துகொண்டு உரையற்றுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். 

அம்பாந்தோட்டையில் துறைமுகம் அமைக்கப்பட்டமையானது வரவேற்கத்தக்கது. நாட்டின் அபிவிருத்திக்கு அது அவசியமாகும். அங்கு அமையப்பெற்றுள்ள துறைமுகம் மற்றும் விமான நிலையத்தினூடாக ஏராளமான தொழில்வாய்ப்புகளை ஏற்படுத்தலாம்.  எனினும் தற்போது குறிப்பிடத்தக்களவு தொழில் வாய்ப்புகளே உள்ளன.

ஆகவே அமைக்கப்படவுள்ள தொழில்பேட்டைகள் மூலம் ஏராளமான தொழில்வாய்ப்புகள் ஏற்படுத்தப்படவுள்ளன. எனினும் சில தரப்பு தவறான கருத்துகளை  முன்வைத்து பொய்ப் பிரசாரம் மேற்கொண்டு வருகிறது. 

எனவே சிலர் குறித்த விடயத்தை அவசியமற்ற முறையில் பூதாகரப்படுத்தி பாதுகாப்பு தரப்புக்கிடையில்  சிக்கல் நிலையைத் தோற்றுவித்து உயிர்ப்பலி ஏற்படுத்துவதற்கு முயற்சிப்பதாக எமக்கு தகவல் கிடைத்துள்ளது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31
news-image

பாடசாலைகளுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் பணி...

2024-04-19 15:55:22