கம்பளை நகர அபிவிருத்தி திட்டத்தின் கீழ் கம்பளை நகரம் தற்போது அபிவிருத்தி செய்யபட்டு வருகின்றது. இந்த அபிவிருத்தி பகுதியின் மலபார் வீதி, கங்கசிரிபுற பகுதியில் தற்காலிக குடியிருப்பில் 03 குடும்பங்களில் சிறுவர்கள் அடங்களாக 15 பேர் வாழ்ந்து வருகின்றனர். 

இவர்கள் 15 வருடங்களாக இந்த பிரதேசத்தில் வசித்து வருவதாக தெரிய வருகின்றது. இந்த காலப்பகுதியில் நகர சபைக்கு செலுத்த வேண்டிய கட்டணங்கள்¸ மின்சார கட்டணம் வாக்குபதிவு போன்றவையும் நிகழ்ந்துள்ளது.

இருந்தும் இவர்களை உடனடியாக இந்த இடத்தை விட்டு வெளியேறுமாறு அபிவிருத்தி திட்ட அதிகாரிகள் கூறியதற்கு இணங்க இந்த குடும்பங்கள் தற்போது எங்கு செல்வ என்று தத்தளித்து கொண்டு இருகின்றனர். 

இந்த அபிவிருத்தி திட்டத்தை உடபளாத்த பிரதேச அபிவிருத்தி குழு தலைவரும் மகாவலி அபிவிருத்தி பிரதி அமைச்சருமான அனுராதா ஜயரத்தன அவர்களின் தலைமையில் நடைபெற்று வருகின்றமை குறிப்பிடதக்கது.

இந்நிலையில் இந்த பிரச்சனையை தமிழ் முற்போக்கு கூட்டணியின் கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வேலு குமார் அவர்கனின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டது. 

அதன் படி பாதிக்கபட்ட மக்களின் பிரச்சனை தொடர்பில் அறிய பாராளுமன்ற உறுப்பினர் வேலுகுமார் சம்பவ இடத்திற்கு விரைந்தார்.

இது தொடர்பில் அவரிடம் வினவிய போது தான் மகாவலி அபிவிருத்தி பிரதி அமைச்சர் அனுராதா ஜயரத்ன அவரிடம் தொலைபேசியுடன் பேசினேன் அவர் இந்த மக்களுக்கு நிரந்தர தீர்வை பெற்றுக் கொடுப்பதாக உறுதி அளித்துள்ளார். 

சிலர் இவர்களுக்கு வீடு வழங்குவதை விரும்பவில்லை இதனாலயே இந்த தாமதம் ஏற்பட்டுள்ளது. எது எவ்வாறாயினும் இந்த குடும்பங்களுக்கு நிரந்தர வீடுகள் வழங்க நடவடிக்கை எடுக்கபடும் என்று கூறினார்.