பாகிஸ்தான் கடற்படைக்கு சொந்தமான இரண்டு கப்பல்கள் நல்லெண்ண ரீதியில் இன்று (05) கொழும்பு துறைமுகத்துக்கு வருகைத்தந்துள்ளன.

பீ.எம்.எஸ்.எஸ்.ஹிங்கோல் மற்றும் பீ.எம்.எஸ்.எஸ்.பெஸோல் ஆகிய இரண்டு கப்பல்களே மூன்று நாள் விஜயம் மேற்கொண்டு கொழும்பை வந்தடைந்துள்ளன.

குறித்த கப்பல்களில் வருகைத்தந்துள்ள பாகிஸ்தான் கடற்படையினர் இலங்கை கடற்படையினர் ஏற்பாடு செய்துள்ள பல நிகழ்வுகளில் பங்குபற்றவுள்ளனர்.

இந்நிலையில் வருகைத்தந்துள்ள கப்பல்கள் எதிர்வரும் 8 ஆம் திகதி புறப்படவுள்ளதாக கடற்படை தகவல்கள் தெரிவிக்கின்றன.