விக்ரம்-வேதா படத்தில் நடிகர் மாதவனின் கதாபாத்திரம் குறித்த விவரங்கள் வெளியாகியுள்ளது.
நீண்ட இடைவெளிக்கு பிறகு 'இறுதிச்சுற்று' படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு நடிகர் மாதவன் 'ரீ-என்ட்ரி' ஆகியிருக்கிறார். இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அவருக்கு பல்வேறு படங்களில் நடிக்க வாய்ப்புகள் வந்தாலும், புஷ்கர் காயத்ரி இயக்கும் ‘விக்ரம் வேதா’ படத்தில் மட்டுமே நடிக்க ஒப்புக் கொண்டார். இதில் மாதவனுடன் இணைந்து விஜய் சேதுபதியும் நடித்து வருகிறார். இதனால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.
'விக்ரம்-வேதா' படப்பிடிப்பு தற்போது இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது. இதில் நேர்மையான பொலிஸ்; அதிகாரி வேடத்தில் மாதவனும், சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் கேங்க்ஸ்டராக விஜய் சேதுபதியும் நடித்து வருகின்றனர்.
இந்நிலையில் இப்படத்தில் பொலிஸ்; அதிகாரியாக நடித்து வரும் மாதவனின் தோற்றம் தற்போது வெளியாகியுள்ளது. இதுகுறித்து நடிகர் மாதவன் 'விக்ரமாதித்யன்' என்னும் பெயரில் தான் நடித்து வருவதாகக் கூறி புகைப்படம் ஒன்றை தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்து கொண்டுள்ளார். மாதவனின் இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகப் பரவிவருகிறது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM