ஐ.எஸ். தீவிரவாதிகளின் பெண் பொலிஸ் படையணியைச் சேர்ந்தவர்கள் பொது இடத்தில் தனது குழந்தைக்கு தாய்ப்பாலூட்டிய குற்றச்சாட்டில் சிரியாவைச் சேர்ந்த பெண்ணொருவர் உடல் உறுப்புகள் வெட்டப்பட்டு கொடூரமான முறையில் கொல்லப்பட்டுள்ளதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

வட சிரிய நகரான ரக்காவைச் சேர்ந்த மேற்படி பெண் பொது இடத்தில் பாலகனான தனது மகனுக்கு தனது உடல் பகுதியை ஆடையால் மறைத்தவாறே தாய்ப்பாலூட்டியுள்ளார்.

எனினும் ஐ.எஸ் பொலிஸ் படையணியான அல் கன்சா, மேற்படி பெண் பொது ஒழுங்கீனத்தை மீறியுள்ளதாக குற்றஞ்சாட்டியுள்ளது.

இந்நிலையில் அந்தப் பெண்ணை சம்பவ இடத்தில் பித்த ஐ.எஸ். பெண் பொலிஸ் படையணியைச் சேர்ந்த உறுப்பினர்களில் ஒருவர் அந்தப் பெண்ணின் கையிலிருந்த குழந்தையைப் பறித்து பிறிதொரு உறுப்பினரிடம் கையளித்த பின்னர் அந்தப் பெண் மேற்படி பெண் பொலிஸாரால் அடித்து உதைக்கப்பட்டுள்ளார்.

அதன் பின் அவரது உடல் உறுப்புகளை வெட்டி அவரை கொடூரமான முறையில் அவர்கள் படுகொலை செய்ததாக ரக்கா பிராந்தியத்திலிருந்து துருக்கிக்கு இடம்பெயர்ந்துள்ள ஆயிஸா என்பவர் தெரிவித்துள்ளார்.