1996 ஆம் ஆண்டு கிரிக்கெட் உலக சம்­பி­ய­னான அணி வீரர்கள் இணைந்து முன்னாள் வீரர்­க­ளுக்கு உத­வி­களை வழங்­கு­வ­தற்­கான அறக்­கட்­டளை ஒன்றை கடந்த செவ்வாய்க்கிழமை அங்­கு­ரார்ப்­பணம் செய்­தனர்.

இதன் மூலம் முன்னாள் வீரர்கள் இரு­வ­ருக்கு நிதி உத­வி­க­ளையும் அன்­றைய தினம் வழங்­கி­வைத்­தனர்.

அர்­ஜுன ரண­துங்க தலை­மை­யி­லான இலங்கை கிரிக்கெட் அணி 1996 ஆம் ஆண்டு உலகக் கிண்­ணத்தை வென்று இலங்­கையை உலக அளவில் பிர­கா­சிக்க வைத்­தது.

அந்த அணி வீரர்கள் அனை­வரும் இணைந்து  3.6 மில்­லியன் ரூபா நிதி­யுடன் புதிய அறக்­கட்­டளை ஒன்றை நேற்­று­முன்­தினம் அங்­கு­ரார்ப்­பணம் செய்­து­வைத்­தனர். 

இந்­நி­கழ்வு எஸ்.எஸ்.சி. விளை­யாட்டுக் கழகத்தின் கேட்­போர்­ கூ­டத்தில் நடை­பெற்­றது. நிகழ்­விற்கு அர­விந்த டி சில்வா, அசங்க குரு­சிங்க, பிர­மோதய விக்­கி­ர­ம­சிங்க, ரொஷான் மஹா­னாம, சமிந்த வாஸ், களு­வி­தா­ரன, தர்­ம­சேன, உபுல் சந்தன என உலக சம்­பியன் அணி வீரர்கள் பலரும் கலந்­து­கொண்­டனர். 

இந்­நி­கழ்வில் ரொஷான் மஹா­னாம கருத்து தெரி­விக்­கையில்,

1996ஆம் ஆண்­டுக்கு முன்னர் நாட்­டுக்­காக கிரிக்கெட் விளை­யா­டிய வீரர்கள் பெரும் கஷ்­டத்­திற்கு மத்­தியில் வாழ்ந்து வரு­கின்­றனர். போட்­டி­களை வென்ற அவர்களால் வாழ்க்கையை வெல்ல முடியாமல் போனது துரதிர்ஷ்ட வசமான சம்பவம். 

உதவிகள் தேவைப்படும் வீரர்களை கண்டறிந்து அவர்களுக்கு உதவி செய்வதுதான் இந்த அறக்கட்டளையின் முக்கிய நோக்கம் என்றார். இந்த சேவைகள் அனைத்தும் இலங்கை கிரிக்கெட் வீரர்களின் சங்கத்தின் ஊடாக நடை முறைப்படுத்தப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.