டயர்களை உற்பத்தி செயும் மிகப் பெரிய தொழிற்சாலை ஹொரணையில்..!

Published By: Robert

05 Jan, 2017 | 02:52 PM
image

உலகில் முதல் தரத்திலான டயர் தயாரிப்பை மேற்கொண்டுவரும் றிச்சட் கைத்தொழிற்சாலை ஹொரணையில் அமைக்கப்படவுள்ளது.

இலங்கை முதலீட்டு வலயத்தில் அமையவுள்ள இந்த கைத்தொழிற்சாலைக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்று மாலை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் இடம்பெறவுள்ளது.

1125 கோடி ரூபா முதலீட்டில் ஆரம்பிக்கப்படவுள்ள இந்த தொழிற்சாலை மூலம் நேரடியாகவும் மறைமுகமாகவும் ஆயிரக்கணக்கான தொழில் வாய்ப்புகள் உருவாகும் என அரசாங்கம் தெரிவித்துள்ளது.

சுற்றாடல் தொடர்பில் முழுமையான ஆய்வுகளுக்கு மத்தியில் பசுமை கைத்தொழில் துறையை இலக்காக கொண்டு அரசாங்கம் முன்னெடுத்துவரும் பாரிய வேலைத்திட்டத்தின் மற்றுமொரு மைல்கல்லாக இந்த தொழிற்சாலை அமையவுள்ளது. 

ஒன்றரை வருட கால குறுகியகாலப்பகுதியில் இந்த தொழிற்சாலை சகல வசதிகளையும் கொண்டதாக நிர்மாணிக்கப்படவுள்ளது.

இந்த தொழிற்சாலையின் மூலம் மேற்கொள்ளப்படும் தயாரிப்புக்களில் 75 சதவீதமானவை வெளிநாட்டு சந்தைகக்கு அனுப்பப்படவுள்ளது. எஞ்சியவை உள்ளுர் சந்தைக்கு விநியோகிக்கப்படவுள்ளதாக றிச்சட் கோப்பிறேசன் லிமிட்டட் நிறுவனத்தின் தலைவர் நந்தன லொக்குவிதான தெரிவித்துள்ளார். 

புதிய தொழிற்சாலைக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வில் மகாசங்கத்தினர், மதத்தலைவர்கள், அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர் உள்ளிட்டோர் கலந்துகொள்ளவுள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தமது குழுமத்தின் புதிய இலச்சினையை வெளியிட்ட...

2024-04-10 22:13:17
news-image

கொழும்பிற்கும் பங்களாதேஷின் டாக்காவுக்கு இடையில் நேரடி...

2024-04-09 15:30:03
news-image

வெற்றிக்கு மீள்வரைவிலக்கணம் வகுத்த Certis Lanka...

2024-04-09 15:30:26
news-image

ஐந்து நட்சத்திர சொகுசு பூட்டிக் ஹோட்டலான...

2024-04-07 14:31:49
news-image

BAIC X55 II SUV வாகனங்களுக்கான...

2024-04-05 02:01:08
news-image

5 வருட காலத்தில் ஃபுட் ஸ்டூடியோ...

2024-04-05 07:00:05
news-image

பான் ஏசியா வங்கியுடன் புத்தாண்டு மாயவித்தையை...

2024-04-04 18:14:00
news-image

சம்பத் கார்ட்ஸ் “சம்பத் பாரம்பரியம்” புத்தாண்டு...

2024-04-04 10:11:20
news-image

கொழும்பு Radisson ஹோட்டலில் புதன்கிழமைகளில் Sri...

2024-04-05 10:18:57
news-image

பிரிட்டிஷ் கவுன்சில் 2024 - 25...

2024-04-01 16:11:16
news-image

USAID அமைப்புடன் இணைந்து ‘Charge while...

2024-04-01 14:23:44
news-image

சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கு மாதாந்தம்...

2024-04-01 14:24:58