எலிசபெத் மகாராணியைச் சுட முயன்ற அவரது அரண்மனைக் காவலருக்கு மன்னிப்பு

Published By: Devika

05 Jan, 2017 | 02:37 PM
image

இங்கிலாந்து மகாராணியாரை அவரது அரண்மனைக் காவலர் ஒருவரே தவறுதலாக துப்பாக்கியால் சுட முயன்ற சம்பவம் அம்பலமாகியுள்ளது. இச்சம்பவம் சில வருடங்களுக்கு முன் இடம்பெற்றதாகவும் கூறப்படுகிறது.

தூக்கம் வராத இரவுகளில் இங்கிலாந்தின் எலிசபெத் மகாராணியார் தனது பக்கிங்ஹாம் அரண்மனைத் தோட்டத்தில் உலாவருவது வழக்கம். 

சில வருடங்களுக்கு முன் இதேபோன்ற ஒரு தூக்கம் வராத அதிகாலைப் பொழுதில் சுமார் 3 மணியளவில் எலிசபெத் மகாராணியார் தோட்டத்தில் நடந்து சென்றுள்ளார்.

இருளில் ஒரு உருவம் நடந்து செல்வதைக் கண்ட ஒரு அரண்மனைக் காவலர் ஒருவர் திடுக்கிட்டார். உடனே, தன்வசமிருந்த துப்பாக்கியை மகாராணியை நோக்கி நீட்டியபடி, “யார் அது?” என்று கேட்டார்.

அதற்கு பதில் சொல்லத் திரும்பியபோதே அது வேறு யாருமல்ல, மகாராணிதான் என்பதை அவர் உணர்ந்தார். உடனே மகாராணியிடம், “இன்னும் ஒரு நொடி தாமதித்திருந்தால் கூட உங்களைச் சுட்டிருப்பேன். என்னை தயவு செய்து மன்னியுங்கள்” என்று பணிந்து கேட்டார்.

இருந்தாலும், தவறு தன்னுடையது தான் என்பதைப் புரிந்துகொண்ட மகாராணி, “பரவாயில்லை. இனிமேல் இவ்வாறு உலா வருமுன் காவலர்களுக்குத் தகவல் சொல்லிவிடுகிறேன்” என்று கூறியிருக்கிறார்.

இச்சம்பவம் நடந்து சில வருடங்கள் ஆன போதும், சற்று முன்னரே இந்தச் செய்தியை லண்டன் பத்திரிகை ஒன்று வெளியிட்டுள்ளது.

கடந்த 2016ஆம் ஆண்டு மே மாதம், 41 வயது நபர் ஒருவர் அரண்மனையின் பாதுகாப்புச் சுவரில் ஏறிக் குதித்து உள்ளே நுழைந்தார். காவலர்கள் அவரைச் சூழ்ந்துகொண்டதும், “மகாராணி உள்ளே இருக்கிறாரா?” என்று சர்வசாதாரணமாகக் கேட்டிருந்தார்.

அதற்கு முன், 2013ஆம் ஆண்டு, இளவரசர் அண்ட்ரூவை தவறுதலாகச் சந்தேகித்த காவலர்கள் அவரைத் தடுத்து வைக்க முயன்று, பின்னர் அது இளவரசர் என்று தெரிந்ததும் அவரிடம் மன்னிப்புக் கேட்ட சம்பவமும் பக்கிங்ஹாம் அரண்மனையில் இடம்பெற்றுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தென் ஆபிரிக்க முன்னாள் ஜனாதிபதி ஸுமா...

2024-03-29 12:42:02
news-image

இஸ்ரேலின் தாக்குதலில் 36 சிரிய இராணுவத்தினர்...

2024-03-29 11:21:33
news-image

காசாவிற்கு தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துகளையும்...

2024-03-29 10:23:49
news-image

தென்னாபிரிக்காவில் தவக்கால யாத்திரீகர்கள் சென்ற பஸ்...

2024-03-29 12:25:44
news-image

தலைமுடி அடிப்படையிலான பாரபட்சங்களுக்கு தடை: பிரெஞ்சு...

2024-03-28 19:33:27
news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47