தென்னாபிரிகாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி 507 என்ற வெற்றியிலக்கினை நோக்கி துடுப்பெடுத்தாடி வருகின்றது.

மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் 130 ஓட்டங்களுக்கு 4 விக்கட்டுகளை இழந்துள்ள இலங்கை அணி வெற்றியிலக்கை அடைய 6 விக்கட்டுகள் கைவசமிருக்க 377 ஓட்டங்களை பெறவேண்டும்.

இலங்கை அணி சார்பில் ஆட்டமிழக்காமல் துடுப்பெடுத்தாடி வரும் மெத்தியூஸ் 29 ஓட்டங்ளையும்  சந்திமால் 28 ஓட்டங்களையும் பெற்றுள்ளனர்.

பந்துவீச்சில் ரபாடா மற்றும் பில்லெண்டர் தலா 2 விக்கட்டுகளை கைப்பற்றியுள்ளனர்.