தொடர்ச்சியாக பெய்து வரும் கடும் மழை காரணமாக மலேசியாவில் இதுவரை சுமார் 23000 பேர் இடம் பெயர்ந்துள்ளதாக அந்நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன. 

மலேசியாவின் கிழக்கு கடற்கரை பகுதியில் உள்ள மாநிலங்கள் மற்றும் வடகிழக்கு பகுதியில் உள்ள இரண்டு மாநிலங்களில் இவ்வருடம் அதிகளவிலான மழை காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. 

வெள்ளம் பாதித்த பகுதிகளிலிருந்து சுமார் 23 ஆயிரம் பேர் இதுவரை அவர்களின் வீடுகளிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். கெலண்டன் பகுதியில் இருந்து 10,038 பேரும், அதன் அருகில் உள்ள டெரென்கனு பகுதியில் இருந்து 12,910 பேரும் வெளியேற்றப்பட்டுள்ளதாக அந்நாட்டு தரவுகள் தெரிவிக்கின்றன. 

இந்நிலையில்  பாதிக்கப்பட்டவர்களுக்கு 139 நிவாரண முகாம்கள் மூலம் உணவு, குடிநீர் மற்றும் மருத்துவ உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. என அந்நாட்டு அரச தரப்பு தெரிவித்துள்ளது.