பிரான்ஸில் புதுவருடத்தில் விதிக்கப்பட்ட கட்டாய சட்டம்..!

Published By: Selva Loges

05 Jan, 2017 | 12:58 PM
image

உடல் ஆரோக்கியத்துடன் இருப்போர்கள்   தமது உடல் உறுப்புகளை தானம் வழங்குவது, 2017 ஜனவரி மாதம் முதல் பிரான்ஸ் நாட்டில் கட்டாய சட்டமாக்கப்பட்டுள்ளது.

உடல் உறுப்புகள் செயலிழந்த பலர் உறுப்பு தானம் கிடைக்காததால் உயிரிழக்கின்றனர். அதை தடுக்கவே பிரான்ஸ் இந்த சட்டத்தை கொண்டு வந்து கட்டாயமாக்கியுள்ளது. 

அத்தோடு  பிரான்ஸில் தானம் பெறப்படும் உடல் உறுப்புகள் ஐரோப்பிய யூனியன் நாடுகளில் உடல் உறுப்புகள் தேவைப்படுவோருக்கும் பொருத்தப்பட உள்ளது.

பிரான்ஸ் நாட்டில் உடல் உறுப்பு தானம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஒருவர் இறந்த பின்னர் உடல் நலத்துடன் கூடிய தகுதியான உடல் உறுப்புகள் அகற்றப்பட்டு தேவைப்படுவோருக்கு பொருத்தப்படும். அதற்கு தற்போதிலிருந்தே குறித்த ஆவணத்தில் கையெழுத்திட்டு உறுதிப்படுத்த வேண்டும். இல்லாவிட்டால் அதற்கான காரணத்தை அரசிற்கு விளக்க வேண்டும். எனக் கூறப்பட்டுள்ளது. 

இறக்கும் தருவாயில் இருக்கும் நபரை வைத்தியர் குழு பரிசோதித்து அவரிடமிருந்து அகற்றக் கூடிய உடல் உறுப்புகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளும். அவர் இறந்தப்பிறகு உறுப்புகள் அகற்றப்படும்.

அந்நாட்டில் இதுவரை 1 லட்சத்து 50 ஆயிரம் பேர் உடல் உறுப்புகள் தானம் செய்யும் ஆவணத்தில் கையெழுத்திட்டுள்ளனர்.

2014-ம் ஆண்டு கணக்கெடுப்பின் படி ஐரோப்பிய யூனியன் நாடுகளில் உடல் உறுப்பு தானத்துக்காக காத்திருப்போர் பட்டியலில் 86 ஆயிரம் பேர் இருந்தனர். மேலும் இதற்கு முன் ஸ்பெயின் மற்றும் ஆஸ்திரியாவில் உடல் உறுப்பு தானம் கட்டாயமாக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தலைமுடி அடிப்படையிலான பாரபட்சங்களுக்கு தடை: பிரெஞ்சு...

2024-03-28 19:33:27
news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47
news-image

வான்வழி விநியோகத்தை நிறுத்துமாறு ஹமாஸ் கோரிக்கை:...

2024-03-27 18:56:33
news-image

ஜேர்மனியில் பேர்லின் - சூரிச் பஸ்...

2024-03-27 18:06:25
news-image

ஒரு பாலினத் திருமண சட்டமூலம் தாய்லாந்து...

2024-03-27 13:27:50
news-image

கடலுக்குள் விழுந்த உதவிப்பொருட்களை மீட்க முயன்ற...

2024-03-27 12:18:17