கிழக்கு மாகாண பொதுமக்கள் பொலிஸார் தொடர்பாடல் பிரிவின்  பொறுப்பதிகாரியாக ஓய்வு பெற்ற சிரேஷ்ட பொலிஸ் அத்திசகட்கர் கே.அரசரட்ணம் பொலிஸ்மா அதிபர் பூஜித ஜெயசுந்தரிவனால் நியமிக்கப்பட்டுள்ளார். 

புதிதாக நியமனம் பெற்ற அவர் மட்டக்களப்பு மாவட்டத்தில் அமைந்துள்ள 12 பொலிஸ் நிலையங்களில் பொதுமக்கள் பொலிஸார் தொடர்பாடல் பிரிவின் பொறுப்பதிகாரிகளைச் சந்தித்து கலந்துரையாடினார்.

மட்டக்களப்பு சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்hக காரியாலய கேட்போர் கூடத்தில் இச்சந்திப்பு இடம்பெற்றது.

மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மாவட்டங்களில் பொதுமக்கள் தொடர்பாடல் பொறுப்பதிகாரியாக இவர் கடமைபுரியவுள்ளமை குறிப்பிடத்தக்கது.