வட்டுவாகல் பாலம் ஊடான போக்குவரத்து தடைப்பட்டது!

Published By: Raam

05 Jan, 2017 | 10:42 AM
image

முல்லைத்தீவிலிருந்து பரந்தன் செல்லும் A 35 பிரதான வீதியில் வட்டுவாகல் பாலப்பகுதியில் கனரக வாகனம் ஒன்றை ஏற்றிய நிலையில் பாரவூர்தியொன்றின் டயர் காற்றுபோனதால் அந்த வீதியூடாக போக்குவரத்து பலமணிநேரம் தடைப்பட்டுள்ளது.

குறித்த பாலம் மிக ஒடுக்கியதாகவும் சேதமடைந்த நிலையிலும் காணப்படுவதால் காரணமாக பாலத்தின் நடுப்பகுதியில் குறித்த வாகனம் பழுதடைந்தமையினால் இந்த வீதியூடாக சேவையிலீடுபடும் பஸ்கள் முதல் ஏனைய கனரக வாகனங்களும் மாற்றுவழியை பயன்படுத்த முடியாத நிலையில் பாலத்தின் இருமருங்கிலும் நீண்டவரிசையில் மாலை ஐந்து மணியிலிருந்து பலமணிநேரமாக காத்து நிற்கின்றன.

தூர இடங்களிலிருந்து பஸ்களில் முல்லைத்தீவுக்கு வந்த பயணிகள் வட்டுவாகாலிலிருந்து முல்லைத்தீவு நகரம் வரை நடந்து செல்வதனைக்காணமுடிகின்றது.

குறித்தவாகனத்தை செலுத்திவந்தவர்கள் வாகனத்தை நடுவீதியில் விட்டுவிட்டு சென்றநிலையில் கடற்படையினரும் பொதுமக்களும் இணைத்து வீதியில் உள்ள வாகனத்தை அகற்றுவதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

குறித்த பாலம் மிகப்பிரதானமான பாலமாக காணப்படுவதுடன் மிக ஒடுக்கமாகவும் சேதமடைந்து காணப்படுவதனால் மிகவிரைவில் புனரமைக்கவேண்டிய தேவையும் ஏற்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை 

2024-04-19 06:12:21
news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55