வவுனியா ஈரப்பெரியகுளம் பகுதி பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றி வந்த பொலிஸ் உத்தியோகத்தர் இன்று காலை 9 மணியளவில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தள்ளனர்.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,

இன்று வவுனியா ஈரப்பெரியகுளம் பகுதியிலுள்ள பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றி வந்த  பாலசூரிய கருணரட்ன  52 வயதுடைய குருநாகல் பகுதியைச் சேர்ந்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவருக்கு  இன்று காலை 9 மணியளவில் மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. 

உடனடியாக வவுனியா பொது வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்படும் வழியில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். தற்போது சடலம் வவுனியா பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.