நீதி­யைத்தான் கேட்­கின்­றோம் பழிவாங்­க முயற்­சிக்­க­வில்லை : சம்­பந்தன்

Published By: Robert

05 Jan, 2017 | 09:29 AM
image

யுத்­தத்தின் போது முறை­யற்ற வகையில் கட்­டளை வழங்­கி­ய­வர்­க­ளுக்கு எதி­ரா­கத்தான் நட­வ­டிக்கை எடுக்­க­வேண்டும். இழைக்­கப்­பட்ட தவ­று­க­ளுக்கும் அவர்­களே பொறுப்­புக்­கூற வேண்­டி­ய­வர்கள். நீதி­யைத்தான் கேட்­கின்­றோமே தவிர பழிவாங்­கு­வ­தற்கு முயற்­சிக்­க­வில்லை என எதிர்க்­கட்சித் தலை­வரும் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் தலை­வ­ரு­மான இரா.சம்­பந்தன் சுட்­டிக்­காட்­டி­யுள்ளார். 

நல்­லி­ணக்கப் பொறி­முறை குறித்த கலந்­தா­லோ­சனைச் செய­ல­ணியின் மக்கள் கருத்து அறியும் அறிக்கை, ஜனா­தி­பதி செய­ல­கத்தில் வைத்து ஜனா­தி­ப­தியின் செய­ல­ரிடம் நேற்­று­முன்­தினம் செவ்­வாய்க்­கி­ழமை இரவு கைய­ளிக்­கப்­பட்­டது. இந்­த­நி­கழ்வில் கலந்­து­கொண்டு உரை­யாற்றும் போதே  எதிர்க்­கட்சித் தலைவர் இரா.சம்­பந்தன் மேற்­கண்­ட­வாறு சுட்­டிக்­காட்­டினார். 

அங்கு அவர் மேலும் தெரி­விக்­கையில், 

அர­சாங்கம் தற்­போது பல பிரச்­சி­னை­களை எதிர்­கொண்­டுள்­ளது. அவர்கள் வழங்­கிய வாக்­கு­று­தி­க­ளையே நிறை­வேற்ற முடி­யாத நிலையில் உள்­ளனர். ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன, யுத்­தக்­குற்­றங்கள் தொடர்­பாக விசா­ர­ணைக்கு  சர்­வ­தேச நீதி­ப­தி­களை நிய­மிக்க முடி­யாது எனக் கூறி­யுள்ளார். 

இலங்­கையின் நீதித்­து­றை­யா­னது கடந்த கால நிலை­மை­க­ளி­லி­ருந்த மாறி­யி­ருக்­கின்­றது. குறிப்­பாக சுயா­தீ­ன­மாக செயற்­ப­டு­கின்­றது என்­பதால் அவர் அவ்­வா­றான நிலைப்­பாட்­டினை எடுத்து கூற­யி­ருக்­கலாம்.  எம்­மைப்­பொ­றுத்­த­வ­ரையில் பாதிக்­கப்­பட்ட தரப்­பினர் நடை­பெ­ற­வுள்ள விசா­ர­ணையில் நம்­பிக்­கையை கொண்டு அதனை  ஏற்­றுக்­கொள்ள வேண்டும். பாதிக்­கப்­பட்ட தரப்­பினர் விசா­ரணைப் பொறி­மு­றையை மறுத்தால் அந்த பொறி­மு­றை­யா­னது என்ன நோக்­கத்­துக்­காக அமைக்­கப்­பட்­டதோ அந்த நோக்­கத்தை அப்­பொ­றி­மு­றையால் அடைந்­து­கொள்ள முடி­யாது. 

இராணு வீரர்கள் பலர் யுத்­தக்­குற்ற விசா­ர­ணைகள் தொடர்­பாக அச்­ச­ம­டை­கின்­றனர். ஆசா­தா­ரண காலத்தில் நடை­பெற்ற விட­யங்­களை இரண்டு பிரி­வாக வகுத்­துக்­கொள்ள முடியும். முத­லா­வ­தாக பாலியல் குற்­றங்கள், சர­ண­டைந்­த­வர்­களை கொலை செய்த குற்­றங்கள் காணப்­ப­டு­கின்­றன.  இரண்­டா­வது யுத்­தத்தை நடத்திச் சென்­ற­மையும் அதன்­போது நிகழ்ந்த குற்­றங்­க­ளு­மாக அமை­கின்­றன. 

இதில் பாலியல் துன்­பு­றுத்தல் மாற்றும் சர­ண­டைந்­த­வர்­களை கொலை­செய்த குற்­றங்­க­ளுக்கு, அதனைப் புரிந்த இரா­ணுவ வீரர்­களே பொறுப்­புக்­கூற வேண்டும். யுத்­தத்தை நடத்திச் சென்­ற­மையும் அதன்­போது நிகழ்ந்த குற்­றங்­க­ளுக்கும் யுத்­தத்­தின்­போது கட்­ட­ளை­களை வழங்­கி­ய­வர்­கள்தான் பொறுப்­புக்­கூற வேண்டும். 

யுத்த களத்தில் நின்­ற­வர்கள் கட்­ட­ளை­களைத் தான் நிறை­வேற்­றி­னார்கள். கட்­ட­ளை­களை வழங்­கி­ய­வர்­க­ளுக்கு எதி­ரா­கத்தான் நட­வ­டிக்கை எடுக்­கப்­ப­ட­வேண்டும். நாங்கள் நீதியைத்தான் கோருகின்றோம். பழிவாங்குவதற்கு முயற்சிக்கவில்லை. ஆகவே எமது நியாயமான கோரிக்கையை புரிந்துகொள்ள வேண்டும்.    

புதிக்கப்பட்ட மக்களுக்கு பரிகாரம் வழங்ககூடிய வகையிலும் நீதியை நிலைநாட்டக்கூடிய வகையிலும் ஒரு நீதி விசாரணை அவசியம். அந்த விசாரணை சுயாதீனமாக அமைய வேண்டும் என்றார்.   

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04