நேபாலத்தில் இருந்து வந்த சுற்றுலா பயணிகளின் பஸ் ஒன்று விபத்திற்கு உள்ளானதில் 18 பேர் காயமடைந்து கம்பளை வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டுள்ளனர். 

கொத்மலை மகாவெலிசாய விகாரையை தரிசித்துவிட்டு கம்பளை பக்கமாக செல்லும் போது கொத்மலை அணைக்கட்டு பிரதேசத்தில் பஸ் வீதியை விட்டு விழகி வீதி ஓரத்தில் இருந்த மரத்தில் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. 

இந்த பஸ்ஸில் சுற்றுலா பயணிகள் 23 பேரும் சாரதி ஒருவரும் பஸ் நடத்துனர் ஒருவருமாக  25 பேர் இருந்துள்ளனர். காயமடைந்த 18 பேரில் 5 நேபால பிக்குமார்களும் ஒரு வியட்நாம் பிக்கும் 09 பெண்களும் 03 ஆண்களும் அடங்குகின்றனர். 

இந்த விபத்து தொடர்பிலான மேலதிக விசாரணைகளை புஸ்ஸல்லாவ போக்குவரத்து பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.