முன்னாள் ரஷ்ய தூதுவர் உதயங்க வீரதுங்கவின் வங்கிக்கணக்குகளை இரத்துசெய்யுமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குறித்த உத்தரவினை கொழும்பு பிரதான நீதவான் லங்கா ஜயரத்ன இன்று பிறப்பித்துள்ளார்.

நிதிக்குற்றப்புலனாய்வு பிரிவினர் நீதிமன்றத்தில் முன்வைத்த கோரிக்கைக்கு அமைய குறித்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

2005-2006ம் ஆண்டு காலப்பகுதியில் மிக் ரக விமானக் கொள்வனவின் போது இடம்பெற்ற மோசடி குறித்து விசாரணை  மேற்கொள்வதற்கு கைதுசெய்ய வேண்டிய தேவையிருப்பதாக நிதிக் குற்றவியல் விசாரணைப் பிரிவு தெரிவித்துள்ளது.