மூக்கில் சதை மீண்டும் மீண்டும் வளருமா.?

Published By: Robert

04 Jan, 2017 | 04:37 PM
image

தினமும் குறைந்தபட்சம் இரண்டடு லீற்றர் தண்ணீராவது குடிக்கவேண்டும் என்று எமக்கு நாமே சுயமாக ஒரு கட்டுப்பாட்டை விதித்துக் கொண்டு கடைபிடித்து வருவோம். அதன் போது வெளியில் செல்லவேண்டிய நிலை உருவானால் கிடைக்குமிடங்களில் தண்ணீர் அல்லது குளிர்பானம் அல்லது இளநீர் போன்றவற்றை அருந்துவோம். இதனால் ஒரு சிலருக்க ஒவ்வாமை ஏற்பட்டு மூக்கில் நீர் ஒழுகத் தொடங்கும். அதாவது இத்தகைய அலர்ஜியால் மூக்குபாதிக்கப்பட்டுவிடும். அதே போல வேறு சிலருக்கு குறிப்பாக நீரிழிவு நோயாளிகள், சிறுநீரக மாற்று சத்திர செய்து கொண்டவர்கள் புற்றுநோய் பாதிப்புடையவர்கள் ஆகியோர்களுக்கு சத்திர சிகிச்சைக்கு பின்னரும் மூக்கில் சதை வளரும் வாய்ப்பு உள்ளது.

Image result for மூக்கில்

ஒவ்வாமையால் அடிக்கடி மூக்கில் தண்ணீர் வடிந்தால் அதனை உடனடியாக கவனிக்கவேண்டும். ஏனெனில் மூளைக்கு பாதுகாப்பு அளிக்கும் சி எஸ் எப் என்ற நீர்ப்படலம் போன்றதொரு பகுதி மூளையில் அமைந்துள்ளது. அதாவது மூக்கின் மேல் பகுதிக்கு மேல் மூளையின் அடிப்பகுதி அமைந்துள்ளது. இவற்றிற்கு இடையேயான இடைவெளி அரிக்கப்பட்டுவிட்டாலோ அல்லது பாதிக்கப்பட்டாலோ அந்த நீர்ப்படலம் மூக்கின் வழியாகத்தான் தண்ணீராக வெளியேறும். ஒரு சிலர் இதனை சாதாரண ஜலதோஷம் என்று எண்ணி கவனியாது விட்டுவிடுவர். இதனால் கிருமிகள் சர்வசாதாரணமாக மூளை வரை ஊடுருவி அதனை தாக்கக்கூடும்.

அலர்ஜி,காளான்,நுண்கிருமிகள் மூலம் மூக்கில் பொலிப் சதை வளரும். மருந்துகளால் இதனை கட்டுப்படுத்த முடியாதநிலை ஏற்பட்டால் இதற்கு சத்திர சிகிச்சைத் தான் நிரந்தரமான தீர்வைத் தரும். தற்போது நோய் எதிர்ப்பு சக்தி திறன் குறைவான அளவில் இருப்பவர்கள், நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டு உடலில் ஏதேனும் சத்திர சிகிச்சை செய்து கொண்டவர்கள். இரத்த பிரிவு மாற்றி சிறுநீரக மாற்று சத்திர சிகிச்சை செய்து கொண்டவர்கள், எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் ஆகியோர்களுக்கு சத்திர சிகிச்சைக்கு பின்னரும் மூக்கில் சதை வளரும் . இவர்களுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட முறையில் எண்டாஸ்கோப்பிக் சைனஸ் சத்திர சிகிச்சையை செய்து கொண்டே இருக்கவேண்டும். அதனை முழுமையாக நீக்கிய பின்னரே அந்த சதை வளர்ச்சி நீங்கும். அது வரை அங்கு தொடாச்சியாக சத்திர சிகிச்சை மேற்கொள்ளவேண்டும். அதே போல் மூக்கில் காளான்களினால் சதை வளர்ச்சி ஏற்பட்டது என்பதை கண்டறிந்தவுடன் சத்திர சிகிச்சை செய்து அவற்றை அகற்றாவிட்டால், கண் நரம்பிற்கு பரவி பார்வைத்திறனை பாதிக்கும். ஒரு சிலருக்கு இந்நிலையில் மூளையைக் கூட பாதிப்படையச் செய்யும். எச்சரிக்கையுடன் இருக்கவேண்டும்.

டொக்டர் K. ரமணிராஜ் M.S.,

தொகுப்பு  அனுஷா.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஹண்டிங்டன்ஸ் நோய் பாதிப்பிற்குரிய நவீன சிகிச்சை

2024-03-26 16:32:47
news-image

இடியோபதிக் பல்மனோரி ஃபைப்ரோசிஸ் எனும் நுரையீரல்...

2024-03-24 21:02:07
news-image

அர்த்ரால்ஜியா எனும் மூட்டு வலி பாதிப்பிற்குரிய...

2024-03-20 21:20:55
news-image

செபோர்ஹெக் கெரடோசிஸ் எனும் தோல் பாதிப்பிற்குரிய...

2024-03-20 09:17:28
news-image

குரல்வளை வீக்கம் : நவீன சிகிச்சை

2024-03-18 18:23:28
news-image

ஆர்டியோஸ்கிளிரோஸிஸ் ரெட்டினோபதி எனும் விழித்திரை பாதிப்பிற்குரிய...

2024-03-16 14:38:19
news-image

உள்காது பாதிப்புகளை கண்டறிவதற்கான நவீன பரிசோதனைகள்

2024-03-15 18:16:00
news-image

பெருங்குடல் வீக்கமும் நவீன சிகிச்சையும் 

2024-03-14 16:20:48
news-image

சிறுநீரக ஆரோக்கியம், அதன் பாதுகாப்பை உறுதிப்படுத்துவோம்!...

2024-03-14 15:59:51
news-image

ஆசனவாய் புற்றுநோய் பாதிப்பிற்கு நிவாரணமளிக்கும் சத்திர...

2024-03-13 22:50:05
news-image

மயோகார்டிடிஸ் எனும் இதய தசையில் ஏற்படும்...

2024-03-08 17:40:06
news-image

நான் ஆல்கஹாலிக் ஃபேட்டி லிவர் எனும்...

2024-03-07 13:48:04