அபிவிருத்தி உபாய முறைகள் மற்றும் சர்வதேச வர்த்தக அமைச்சர் மலிக் சமரவிக்ரம மற்றும் பிரதமரின் ஆலோசகர் ஆர்.பாஸ்கரலிங்கம் ஆகியோருக்கெதிராக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முறைப்பாடொன்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த முறைப்பாடு கூட்டு ஏதிர்க்கட்சியின் உறுப்பினர்களினால் முன்வைக்கப்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அலுத்கமகே தெரிவித்துள்ளார்.

அம்பாந்தோட்டை துறைமுகத்தை சீன நிறுவனமொன்றுக்கு வழங்கியதனூடாக அரசாங்கத்துக்கு சொந்தமான 330 பில்லியன் ரூபா மோசடி செய்யப்பட்டுள்ளதாக, குறித்த முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.