விடுமுறைக் காலம் என்பது நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் ஒன்றுகூடுவது மற்றும் ஏராளமான உணவு வகைகளின் சுவை அனுபவம் என இனிமை நிரம்பிய ஒரு தருணமாகும்.

நத்தார் பிறப்பதற்கு முந்தைய இரவு உணவு, நத்தார் தின மதிய உணவு, நத்தார் தினத்திற்கு மறுநாள் காலை மற்றும் மதிய பொழுதுகளுக்கு இடையிலான உணவு அல்லது புத்தாண்டு பிறப்பதற்கு முந்தைய இரவு உணவு என பல ஆண்டுகளாக ஐஸ்-கிறீம் ஆனது ஒரு பாரம்பரியமான இனிப்பு சுவையுணவாகத் திகழ்ந்து வருகின்றது. உள்நாட்டில் பாலை மூலமாகக் கொண்ட உற்பத்திகளை தயாரிப்பதில் முன்னிலை வகித்துவருகின்ற ஒரு உற்பத்தி நிறுவனமான Pelwatte Dairy Industries Ltd, இந்த ஆண்டில் மேற்குறிப்பிட்ட பாரம்பரியத்திற்கு கூடுதல் சிறப்பைச் சேர்ப்பிக்கும் வகையில், அற்புதமான ஐஸ்-கிறீம் சுவை வடிவங்களை அறிமுகப்படுத்தியுள்ளது.     

பாரம்பரியமான சொக்கிலேற் மற்றும் வனிலா ஐஸ்-கிறீம் உற்பத்திகளுக்குப் புறம்பாக, Pelwatte Dairy ஐஸ்-கிறீம் உற்பத்தி வரிசையில் வாழைப்பழம், புருட் அன்ட் நட், மாம்பழம் மற்றும் ஸ்ரோபெரி போன்ற பழச்சுவை வடிவங்களும் உள்ளடங்கியுள்ளன. உள்நாட்டில் பெறப்படுகின்ற முழு ஆடைப் பாலை உபயோகித்து தயாரிக்கப்படுகின்ற Pelwatte Dairy ஐஸ்-கிறீம் தயாரிக்கப்படுவதற்கு 100% இயற்கை மூலப்பொருட்கள் மட்டுமே உபயோகிக்கப்படுகின்றன. செயற்கை இனிப்பு சுவையூட்டிகள் அல்லது பால்மமாக்கிகள் உபயோகிக்கப்படாது, இந்த உற்பத்தியானது ஆரோக்கியமானதாகவும், நுகர்வதற்கு பாதுகாப்பானதாகவும் உள்ளது.    

இந்த ஐஸ்-கிறீம் உற்பத்தி வரிசை தொடர்பில் Pelwatte Dairy சந்தைப்படுத்தல் பணிப்பாளரான அக்மல் விக்கிரமநாயக்க குறிப்பிடுகையில், “ஐஸ்-கிறீம் ஆனது பல தசாப்தங்களாக குடும்ப உணவுகள் மற்றும் நத்தார் பருவகாலத்தில் இனிமையைச் சேர்ப்பிக்கும் தனிச்சிறப்பான ஸ்தானத்தை வகித்து வந்துள்ளது.

எமது பழச்சுவை வடிங்கள் இப்பாரம்பரியத்தில் ஒரு திருப்பத்தை ஏற்படுத்தி, வெப்பமண்டல சுவையை சேர்ப்பிக்கின்றன. இயற்கை வாழைப்பழ மற்றும் மாம்பழ சுவை வடிவங்கள் உள்நாட்டு சுவையரும்புகளுக்கு வலுவான சுவையை சேர்ப்பிப்பதுடன், ஸ்ரோபெரி மற்றும் புருட் அன்ட் நட் சுவை வடிவங்கள் கூடுதல் இனிப்பு சுவையரும்பைக் கொண்டவர்களுக்கு இன்னும் அதிகமான சுவையைச் சேர்ப்பிக்கின்றன” என்று கூறினார்.  

Pelwatte Dairy ஐஸ்-கிறீம் உற்பத்திகள் 80 மிலீ கப் மற்றும் 500 மிலீ, 1 லீ, 2 லீ மற்றும் 4 லீ பெட்டிகளில் வெளிவருவதுடன், நாடளாவியரீதியில் அனைத்து பலசரக்கு விற்பனை நிலையங்களிலும் கிடைக்கப்பெறுகின்றன. மேலதிக விபரங்களை அறிந்துகொள்ள 0112 452094 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு அழைப்பினை ஏற்படுத்தவும்.