கட்டுகஸ்தோட்டை ஹேதெனிய என்ற இடத்தில் முச்சக்கர வண்டி ஒன்றை சுற்றி வலைத்த பொலிஸார் 5 கிராம் ஹெரோயின் போதைப் பொருளையும் மூன்று சந்தேக நபர்களையும் முச்சக்கர வண்டியுடன் கைது செய்துள்ளனர்.

குருநாகல் பிரதேசத்திலிருந்து கண்டி பிரதேசத்தில் பல்வேறு இடங்களிலும் விற்பனை செய்வதற்காக இவை எடுத்து வரப்பட்டதாக முதற்கட்ட விசாரணைகள் மூலம் தெரிய வந்துள்ளது.

கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர்கள் மஹய்யாவ,தென்னேகும்புர மற்றும் கட்டுகஸ்தோட்டை பிரதேசங்களைச் சேர்ந்தவர்களாகும்.

கட்டுகாஸ்தோட்டைப் பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். சந்தேக நபர்களை கண்டி நீதவான் முன் ஆஜர்செய்ய நடவடிக்கை எடுத்துள்ளனர்.