குளியாப்பிட்டியவில் அமையப்பெறவுள்ள வொக்ஸ்வாகன் மோட்டார் கார் தொழிற்சாலைக்கான அடிக்கல் நாட்டு நிகழ்வு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையில் இன்று நடைபெற்றது.

குளியாப்பிட்டிய லபுயாய பிரதேசத்தில் 50 ஏக்கர் நிலப்பரப்பில் குறித்த மோட்டார் வாகன தொழிற்சாலை அமையப்பெறவுள்ளது.

அடிக்கல் நாட்டு நிகழ்வில் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க, கல்வியமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.