இலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கிடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இளம் வீரரான லஹிரு குமார 6 விக்கட்டுகளை பெற்று தென்னாபிரிக்காவின் முதல் இன்னிங்ஸ் ஓட்ட எண்ணிக்கையினை 392 ஓட்டங்களுக்கு இலங்கை அணியினர் மட்டு படுத்தியுள்ளனர்.
தென்னாபிரிக்காவின் கேப் டவுன் மைதானத்தில் இடம்பெற்றுவருகின்ற இலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கிடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் நாணயசுழற்சியில் வென்ற இலங்கை அணி தென்னாபிரிக்கா அணியினை முதலில் துடுப்பெடுத்தாட அழைத்தது. அதற்கமைய நேற்று நாள் ஆட்ட முடிவில் முதலாவது இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்க அணி 297 ஓட்டங்களுக்கு 6 விக்கட்டுகளை இழந்திருந்தது.
வலுவான நிலையில் 4 விக்கெட்டுக்களை கைவசம் கொண்டு இன்றைய நாள் ஆட்டத்தினை தொடங்கிய தென்னாபிரிக்கா அணியிரை மேலும் 100 ஓட்டங்களை கூட குவிக்க முடியாதவாறு இலங்கை அணியின் பந்து வீச்சாளர்கள் சிறப்பாக தங்களின் பந்து வீச்சில் ஈடுபட்டனர்.
தென்னாபிரிக்க அணி சார்பில் எல்கர் 129 ஓட்டங்களை பெற்றுக்கொண்டதுடன், டி கொக் 101 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தனர். பந்துவீச்சில் லஹிரு குமார 6 விக்கட்டுகளையும் ஹேரத் மற்றும் லக்மால் தலா 2 விக்கட்டுக்களை பெற்றுக்கொண்டனர்.
இந்த மைதானத்தில் இதற்கு முன்னதாக தென்னாபிரிக்கா அணி 14 போட்டிகளில் விளையாடி, ஒரே ஒரு போட்டியில் மாத்திரமே தோல்வியுற்றிருக்கிறது. அதேபோன்று, இதுவரை இந்த மைதானத்தில் மூன்று போட்டிகளில் பங்குபற்றிய இலங்கை அணி, அவை அனைத்திலும் தோல்வியடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM