கட்டார் நாட்டுக்கான புதிய இலங்கைத் தூதுவராக வர்த்தகர் எ.எஸ்.பி.லியனகே நியமிக்கப்பட்டுள்ளார்.

குறித்த நியமனத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கடந்த டிசம்பர் மாதம் 31 ஆம் திகதி வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எ.எஸ்.பி.லியனகே இதற்கு முன்னர் நைஜீரியாவுக்கான இலங்கைத் தூதுவராக ஒரு வருடம் கடமையாற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.