டொயோட்டா லங்காவின் நவீன வாகன உடல் பழுது பார்த்தல் மற்றும் வர்ணம் பூசும் மையம் மஹரகமவில்

Published By: Robert

03 Jan, 2017 | 01:58 PM
image

இலங்கையில் டொயோட்டா வாகனங்களிற்கான ஏக விநியோகஸ்தரான டொயோட்டா லங்கா வரையறுக்கப்பட்ட (தனியார்) நிறுவனமானது, சமீபத்தில் தனது நவீன வாகன உடல் பழுது பார்த்தல் மற்றும் வர்ணம் பூசுதல் மையமொன்றை மஹரகம பிரதேசத்தில் ஆரம்பித்துள்ளது. 

ஆரம்பித்து வைக்கப்பட்ட இந்நிகழ்வில் டொயோட்டா லங்கா வரையறுக்கப்பட்ட (தனியார்) நிறுவன நிர்வாக இயக்குனர் சுங்கோ யொஷியோக்கா, இந்நிகழ்வில் உரையாற்றுகையில், “வாடிக்கையாளர்கள் எமது சேவையை பெற்றுக்கொள்ள நீண்ட காலம் காத்திருக்க வேண்டியதைக் குறித்து நான் மிகவும் அதிருப்தி அடைந்திருக்கின்றேன். ஆனால் தற்போதைய புதிய வசதி விரிவாக்கலினால், பழுது பார்த்தல் மற்றும் சேவை வழங்கலிற்கான எங்களது திறன் அதிகரித்திருப்பதுடன் வாடிக்கையாளர்களிற்கு மேம்பட்ட சேவை அனுபவத்தை வழங்க இயலுமாகவும் காணப்படுகிறது” என குறிப்பிட்டார்.

டொயோட்டா லங்கா வரையறுக்கப்பட்ட (தனியார்) நிறுவனத்தின் இயக்குனர் மற்றும் தலைமை நிறைவேற்று அதிகாரியான மனோகரா அத்துக்கோரல இந்நிகழ்வில் உரையாற்றுகையில், “இப்புதிய மையமானது பெரியளவிலான முதலீட்டுடன் ஆரம்பிக்கப்பட்டு இருந்தாலும்;, எங்களது வாடிக்கையாளர்களை இலகுவில் அணுகவும் அவர்களிற்கான வசதி வாய்ப்பை வழங்குவதற்கும் கடந்த தசாப்தங்களாக நாங்கள் கட்டியெழுப்பியுள்ள நம்பிக்கையின் மூலமாக மஹரகம பிரதேசத்தில் எமது சர்வதேச அனுபவத்தை வழங்கும்படியாகவும் இவ்வசதி விரிவாக்கலானது ஆரம்பிக்கப்பட்டுள்ளது.” என கருத்துத் தெரிவித்தார்.

இந்த நவீன வசதியானது, அதி நவீன கட்டமைப்புகளுடன் அமையப்பெற்றிருப்பது மாத்திரமன்றி டொயோட்டாவின் நுட்பம் வாய்ந்த சுற்றுச்சூழலிற்கு உகந்த வழிமுறைகளின் கீழ் உருவாக்கப்பட்டுள்ளது. இச்சேவை மையமானது டொயோட்டா வாகனங்களது பராமரிப்பில் சர்வதேச தரங்களை உறுதிப்படுத்துவதற்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளதுடன், டொயோட்டா வாகனத்தை மீண்டும் அதனது அசல் நேர்த்திக்கு கொண்டுவரக்கூடிய திறனைப்பெற்ற இலங்கையிலுள்ள ஒரே சேவை மையமாகவும் காணப்படுகின்றது. டொயோட்டா சிறப்பு சேவை கருவிகளாகிய மேம்பட்ட வெல்டிங் இயந்திரங்கள், விரைவான உலர்த்துதலிற்கான அகச்சிவப்பு ஹீட்டர்கள் மற்றும் நீர் மூலமான வர்ண பூச்சு கருவிகள் போன்ற அனைத்து கருவிகளும் குறிப்பாக டொயோட்டா வாகனங்களிற்கான சேவையை வழங்கும்பொருட்டு இறக்குமதி செய்யப்பட்டுள்ளன. டொயோட்டா குடும்பத்திற்கு சேர்க்கப்பட்டுள்ள இப்புதிய அறிமுகமானது குறுகிய கால காத்திருக்கும் நியமனம், உயர்தரம், வேகமான பழுது பார்த்தல் மற்றும் விநியோகத்துடன் கொழும்பு பிரதேசத்தின் கிழக்கு மற்றும் தெற்குப்பகுதிகளிலுள்ள தேவைகளை சந்திக்க இயலுமானதாக காணப்படும். இச்சேவை மையமானது, வர்ண பூச்சு வேலைகளை வழங்குவதுடன் சிறிய மற்றும் நடுத்தர அளவிலான சேதங்களை திருத்தல் போன்ற சேவைகளில் ஈடுபடும்.

ஒரு சிறிய பட்டறையாக காணப்பட்ட இந்த மஹரகம கிளையானது படிப்படியாக பாரிய வசதிகளுடன் கூடிய கட்டத்திற்கு வளர்ந்துள்ளதுடன், தமது வாகனங்களிற்காக காத்திருக்கும் வாடிக்கையாளர்களுக்கு சௌகரிகமாக உணரும்படியாக நவீன வாடிக்கையாளர்கள் ஓய்வு கூடங்களையும் தன்னகத்தே கொண்டுள்ளது. டொயோட்டா பயிற்சி பெற்ற பொறியிலளாளர்கள் மற்றும் தொழில்நுட்பவியலாளர்கள் அசல் உபகரண உற்பத்தி மூலம் குறிப்பிட்ட வர்ணப்பூச்சு மற்றும் மேற்பூச்சுக்களில் தொழிலாளர்களின் உயர்தரத்தை உறுதி செய்கின்றனர்.

மேலதிக தகவல்களிற்கு மஹரகம சேவை மையத்தை 0112804834-37 / 0777939052 எனும் தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளவும் அல்லது இல. 396, கொழும்பு தெற்கு வீதி, நாவின்ன, மஹரகமவில் அமைந்துள்ள எங்களது காட்சியறைக்கு வருகை தரவும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தமது குழுமத்தின் புதிய இலச்சினையை வெளியிட்ட...

2024-04-10 22:13:17
news-image

கொழும்பிற்கும் பங்களாதேஷின் டாக்காவுக்கு இடையில் நேரடி...

2024-04-09 15:30:03
news-image

வெற்றிக்கு மீள்வரைவிலக்கணம் வகுத்த Certis Lanka...

2024-04-09 15:30:26
news-image

ஐந்து நட்சத்திர சொகுசு பூட்டிக் ஹோட்டலான...

2024-04-07 14:31:49
news-image

BAIC X55 II SUV வாகனங்களுக்கான...

2024-04-05 02:01:08
news-image

5 வருட காலத்தில் ஃபுட் ஸ்டூடியோ...

2024-04-05 07:00:05
news-image

பான் ஏசியா வங்கியுடன் புத்தாண்டு மாயவித்தையை...

2024-04-04 18:14:00
news-image

சம்பத் கார்ட்ஸ் “சம்பத் பாரம்பரியம்” புத்தாண்டு...

2024-04-04 10:11:20
news-image

கொழும்பு Radisson ஹோட்டலில் புதன்கிழமைகளில் Sri...

2024-04-05 10:18:57
news-image

பிரிட்டிஷ் கவுன்சில் 2024 - 25...

2024-04-01 16:11:16
news-image

USAID அமைப்புடன் இணைந்து ‘Charge while...

2024-04-01 14:23:44
news-image

சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கு மாதாந்தம்...

2024-04-01 14:24:58