சீனாவின் யுவான் பெறுமதியானது அமெரிக்க டொலர்களின் பெறுமதியிற்கு எதிராக கடந்த 22 ஆண்டுகளில் முதல் முறையாக பாரிய சரிவை கண்டுள்ளது.

அமெரிக்க டொலருக்கு எதிரான சீனாவின் டொலர் மதிப்பானது 26.4 வீதத்தில் இருந்து 22.4 வீதத்திற்கு குறைந்துள்ளது. இதுவே கடந்த 22 ஆண்டுகளில் சீனா கண்ட பாரிய பண பெறுமதி இழப்பாகும்.

சீனாவின் பணப்பெறுமதியான யுவானை மதிப்பீடு செய்ய இது வரைகாலமும் 13 நாடுகளின் பணபெறுமதிகள் செல்வாக்கு செலுத்தி வந்தன. தற்போது மேலதிகமாக 11 நாடுகளின் பணப்பெறுமதி மதிப்பீடல்கள் சேர்க்கப்பட்டுள்ளன. இது யுவானிற்கான பெறுமதியை அமெரிக்க டொலரிடத்தில் இருந்து குறைத்து மதிப்பிட வழிவகுக்கும்.

யுவானின் பெறுமதியை தீர்மானிப்பதில் 24 நாடுகளின் நாணய மாற்று விகிதங்கள் செல்வாக்கு செலுத்துவது இதுவே முதல் தடவையாகும்.

எதிர்வரும் காலத்தில் பொருளாதார சரிவுகளை சரி செய்து சீனா அமெரிக்க டொலருக்கு எதிராக தனது பணப்பெறுமதியை உயர்த்த வேண்டியது அந்நாட்டின் பொருளாதார கட்டுமானத்தை பலப்படுத்தும் என்பது குறிப்பிடத்தக்கது.