இதய பாதிப்பைக் குணப்படுத்தும் ஸ்டெம் செல் சிகிச்சை

Published By: Robert

03 Jan, 2017 | 11:15 AM
image

தெற்காசியாவில் தற்போது பிறக்கும் போதே குழந்தைகள் இதயக் கோளாறுகளுடன் பிறக்கிறார்கள். அதிலும் புளூ பேபி எனப்படும் இதயக்குறைபாடுடன் குழந்தைகள் பிறக்கிறார்கள்.

இவர்களுக்கு ஸ்டெம்செல் சிகிச்சை வழகுவதன் மூலம் அவர்களின் பாதிப்பு முழுமையாக நீக்கப்படமுடியும் என்று மருத்துவர்கள் கண்டறிந்திருக்கிறார்கள்.

புளூ பேபி பாதிக்கப்பட்ட குழந்தைகள் அழுதால் உடல் முழுவதும் நீல நிறமாகி விடும். பொதுவாக எம்முடைய இதயத்தில் இருக்கும் இரண்டு இரத்த குழாய்கள் தான் இதயத்திற்கான குருதியை செலுத்துகிறது. அதிலும் சுத்திக்கரிக்கப்படாத இரத்தம் வலது பக்க இதய அறையிலிருந்து இரத்த குழாய்கள் மூலம் நுரையீரலுக்கு எடுத்துச் செல்லப்படும். அவை அங்கு சுத்திகரிக்கப்பட்டு மீண்டும் இதயத்தின் இடது பக்கத்திற்கு வந்து, அங்கிருந்து உடல் முழுவதும் பம்ப் செய்யப்படும். இந்நிலையில் இந்த புளூ பேபியால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் பல்மனரி இரத்தக்குழாயின் அளவு இயல்பை விட குறுகியதாக இருக்கும். அதனால் போதிய அளவிலான இரத்தம் நுரையீரலுக்குச் செல்வதில்லை. இதனால் சுத்திக்கரிக்கப்படாத அசுத்தமான இரத்தம், சுத்திக்கரிக்கப்பட்ட இரத்தத்துடன் சேர்ந்து உடல் முழுவதும் பம்ப் செய்யப்படும் நிலை உருவாகிறது. இதனால் போதிய அளவிற்கு ஓக்ஸிஜன் இதயத்திற்கு கிடைக்காத சூழல் உருவாகிறது. இதயத்திற்கு ஓக்ஸிஜன் கிடைக்கவில்லை எனில் இதயம் செயலிழக்கும் நிலை உருவாகலாம். பழுதடைந்த இரத்த குழாய்களை சத்திர சிகிச்சைகள் மூலம் சீரமைக்கவேண்டும். இதன் போது இரத்த குழாய்களை மட்டுமே சீரமைத்தால் போதுமானதல்ல. இதயத்தில் பழுதடைந்திருக்கும் பகுதியிலுள்ள செல்களும் புதுப்பிக்கப்படவேண்டும். 

இதனால் இத்தகைய பாதிப்பிற்குள்ளான குழந்தைகளின் பெற்றோர்களின் இரத்த வகை கண்டறியப்பட்டு, அவர்களின் தந்தை அல்லது தாயின் எலும்பு மஜ்ஜையிலிருந்து ஒரு குறிப்பிட்ட அளவிற்கு ஸ்டெம்செல் எடுக்கப்பட்டு சிகிச்சையின் போது பயன்படுத்துவார்கள். பாதிக்கப்பட்ட இடத்தில் செலுத்தப்படும் இத்தகைய ஸ்டெம் செல்கள் அங்கு புதிய செல்கள் வளரத் தொடங்குகின்றன. இது போன்ற சிகிச்சை அளிக்கப்பட்டு தற்போது ஏராளமான குழந்தைகள் குணமடைந்திருக்கிறார்கள்.இது தற்போது சர்வதேச அளவில் பெரியதொரு கவனத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

டொக்டர் K M செரியன்.,

தொகுப்பு அனுஷா.

தகவல் : சென்னை அலுவலகம்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அதீத கொழுப்பு பாதிப்பிற்குரிய நவீன சிகிச்சை

2024-04-18 17:30:48
news-image

ஈஸோபாகல் அட்ராஸியா எனும் உணவு குழாய்...

2024-04-17 17:43:31
news-image

நுரையீரல் உயர் குருதி அழுத்த பாதிப்பிற்குரிய...

2024-04-16 17:40:01
news-image

ஓடிடிஸ் மீடியா எனும் நடு காதில்...

2024-04-15 16:27:12
news-image

சிஸ்டிக் ஃபைப்ரோசிஸ் எனும் பாதிப்பிற்குரிய நவீன...

2024-04-15 02:57:12
news-image

ஹீட் ஸ்ட்ரோக் எனும் பாதிப்பிற்குரிய சிகிச்சை

2024-04-12 01:31:06
news-image

பிறவி அட்ரீனல் ஹைப்பர்பிளேசியா எனும் சுரப்பியில்...

2024-04-10 22:59:16
news-image

ரூமாடிக் ஹார்ட் டிஸீஸ் எனும் இதய...

2024-04-09 17:25:41
news-image

யாழில் புற்றுநோய் அதிகரிப்பு ! கடந்த...

2024-04-09 09:37:01
news-image

கை நடுக்கம் எனும் பாதிப்பிற்குரிய நவீன...

2024-04-08 18:33:54
news-image

உலக ஆரோக்கிய தினத்தில் உறுதி கொள்வோம்!

2024-04-08 10:00:07
news-image

டெஸ்டிகுலர் கேன்சர் எனும் விரைசிரை புற்றுநோய்...

2024-04-05 20:56:29