வவுனியாவில் சிறுமி ஒருவரை கடத்தும் முயற்சி முறியடிக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் குறித்த மேலும் தெரியவருகையில்,

சமூக வலைத்தளம் மூலமாக தொடர்பினை மட்டக்களப்பிலிருந்து ஏற்படுத்திய இளைஞர் ஒருவர், சுந்தரபுரம் பகுதியிலுள்ள 16 வயதுடைய சிறுமியுடன் தொடர்பினை ஏற்படுத்தி பல காலமாக பழகி வந்தள்ளார்.

நேற்று மாலை வவுனியா பஸ் நிலையத்திற்கு வருமாறு குறித்த இளைஞன் அழைத்துள்ளார்.

குறித்த சிறுமியும் இளைஞனின் வார்த்தைக்கு இணங்கி வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் ஆடைகளை எடுத்துக்கொண்டு வந்துள்ளார். 

சிறுமி வீட்டிலிருந்து வெளியேறுவதாக தந்தைக்கு அயலவர்களினால் தகவல் வழங்கப்பட்டுள்ளது. தந்தை உடனடியாக வவுனியா வர்த்தக நிலையத்தில் பணிபுரியும் உறவினருக்குத் தகவல் வழங்கியுள்ளார்.

பஸ் நிலையத்தில் காத்திருந்த உறவினர் சிறுமி பஸ்ஸில் வந்து இறங்கியதும் குறித்த இளைஞர் பஸ் தரிப்பிடத்தில் சிறுமியை அழைத்துச் செல்ல தயாராக இருந்ததையடுத்து காத்திருந்த உறவினர்கள் குறித்த இருவரையும் கடுமையாகத்தாகியதுடன் வவுனியா பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துனர்.

இச்சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை சிறுவர் பெண்கள் பொலிஸ் பிரிவினரால் மேற்கொண்டு வருகின்றனர்.