இலங்கையின் முன்னணி சைனீஸ் உணவகங்களில் ஒன்றான சைனீஸ் ட்ராகன் கஃபே, தனது புதிய கிளையை இல. 203A, காலி வீதி, இரத்மலானை எனும் முகவரியில் அண்மையில் திறந்து வைத்திருந்தது.

அதிகளவு இடவசதியைக் கொண்ட இந்தக் கிளை, சிறந்த உள்ளக சூழலை கொண்டுள்ளதுடன், சைனீஸ், உள்நாட்டு, மொங்கோலியன் மற்றும் பார்பிகியு போன்ற புதிய உணவுத் தெரிவுகளின் மூலமாக, விருந்தினர்களுக்கு மறக்க முடியாத சுவை அனுபவங்களை வழங்க தயாராகவுள்ளது.

ராஜகிரிய, கொழும்பு கோட்டை மற்றும் வத்தளை ஆகிய பகுதிகளில் தனது கிளை வலையமைப்பைக் கொண்டுள்ள சைனீஸ் ட்ராகன் கஃபே இன் இரத்மலானை புதிய கிளை  மேலும் வலுவூட்டும் வகையில் அமைந்துள்ளதுடன், வாடிக்கையாளர்களுக்கு “நினைவிருக்கும் உணவு” எனும் தொனிப்பொருளுக்கமைய சுவையான உணவு வகைகளை வழங்க மேலும் பக்கபலமாகவும் அமைந்துள்ளது.

1942 ஆம் ஆண்டு இலங்கைக்கு வருகை தந்த சீனர்கள் மூலமாக, சைனீஸ் ட்ராகன் கஃபே உணவகம் பம்பலப்பிட்டியில் ஸ்தாபிக்கப்பட்டது. பாரம்பரிய சீன உணவு வகைகளை தயாரித்து வழங்கும் வகையில் இந்த உணவகம் செயலாற்றி வருகிறது. 

73 ஆண்டுகளாக, சைனீஸ் ட்ராகன் கஃபே உணவகம், இலங்கையின் நுகர்வோருக்கு 300க்கும் அதிகமான சுவை மிகுந்த உணவு வகைகளை வழங்கி வருகிறது. 

பாரம்பரிய சீன உணவு வகைகளுக்கு அப்பால் சென்று, “நினைவிருக்கும் உணவு” எனும் தொனிப்பொருளுக்கமைய சுவையான உணவு வகைகளை வாடிக்கையாளர்களுக்கு வழங்கி வரும் சைனீஸ் ட்ராகன் கஃபே, நாவில் சுவையூறும், Hot & spicy seafood (Tom Yum), Hot butter cuttlefish, Seafood fried rice, Chilli crab, Manchurian chicken, Mock duck in kung pao sauce மற்றும் சீன நாட்டின் விசேட உணவு வகைகளையும் தயாரித்து வழங்குகிறது. 

சைனீஸ் ட்ராகன் கஃபே முகாமைத்துவ பணிப்பாளர் நைஷாட் உதேஷி கருத்து தெரிவிக்கையில், “நாட்டில் காணப்படும் பழமையான சீன உணவகம் எனும் வகையில், சுமார் 73 ஆண்டுகளாக மக்களுடன் சிறந்த உறவை பேணி வருகிறோம். எனவே, நாம் அவர்களுக்கு நினைவிருக்கும் உணவுகளை வழங்க எப்போதும் முயற்சி செய்கிறோம். சமூகத்தைச் சேர்ந்த அனைவருக்கும் சகாயமான விலையில் அசல் சீன உணவு வகைகளை வழங்குவது எமது மற்றுமொரு நோக்கமாக அமைந்துள்ளது. 

நகரப்பகுதியைச் சேர்ந்த மக்கள் மத்தியில் அதிகளவு வரவேற்பைப் பெற்ற சீன உணவகமாக நாம் திகழ்கிறோம். பல தசாப்த காலமாக நாம் இந்த நிலையைப் பேணி வருகிறோம், ஏனெனில் எமது உணவுகளின் தரம் உயர்ந்த மட்டத்தில் காணப்படுகிறது. அனுபவம் வாய்ந்த சமையல் நிபுணர்கள் எம்முடன் 30 ஆண்டுகளுக்கு மேலாக இணைந்துள்ளனர், எமது வெற்றிகரமான செயற்பாட்டின் பின்னணியில் இவர்கள் காணப்படுகின்றனர்” என்றார்.

அவர் தொடர்ந்து குறிப்பிடுகையில், “கடந்த தசாப்த காலங்களில் உலகளாவிய ரீதியில் மக்களின் வாழ்க்கை முறையில் ஏற்பட்ட மாற்றங்களைத் தொடர்ந்து, மக்களின் உணவு பழக்கங்களிலும் மாற்றம் ஏற்பட்டுள்ளது. எனவே, சீன உணவுகள் மற்றும் கீழைத்தேய, மேலைத்தேய உணவுகளிலும் புதிய தெரிவுகள் உள்ளடக்கப்பட்டுள்ளன.

இந்த மாற்றத்துக்கமைய எமது சைனீஸ் ட்ராகன் கஃபேயும் மாற்றத்தை பின்பற்றியுள்ளது. எனவே, பாரம்பரிய சீன உணவு வகைகளை வழங்குவதற்கு மேலதிகமாக, எமது வாடிக்கையாளர்களுக்கு தமது சுவை நரம்புகளுக்கு விருந்தளிக்கும் வகையில் புதிய சீன, மேலைத்தேய மற்றும் கீழைத்தேய உணவு வகைகளை சுவைப்பதற்கான வாய்ப்பையும் வழங்குகிறோம்” என்றார்.

சைனீஸ் ட்ராகன் கஃபே உணவகத்தில் காணப்படும் சூழல், குடும்பங்கள், நண்பர்கள் குழுக்கள், உள்நாட்டவர்கள் மற்றும் வெளிநாட்டவர்களை பெரிதும் கவரும் வகையில் அமைந்துள்ளது. இவ்வாறு வருகை தரும் விருந்தினர்களுக்கு நட்புறவான சேவைகளை வழங்கும் வகையில் உணவகத்தின் ஊழியர்கள் செயலாற்றி வருகின்றனர்.

சைனீஸ் ட்ராகன் கஃபே உணவகத்தினால் வழங்கப்படும் சேவைகளில் வாடிக்கையாளர்களுக்கு உணவகத்திலிருந்து உணவு உட்கொள்ளல் (Dine-in) உணவை வீட்டுக்கு எடுத்துச் செல்லல் வசதி (Take Away food), வீட்டுக்கு மற்றும் அலுவலகத்துக்கு உணவு விநியோகம் (Home and Office Delivery), அலுவலக ஊழியர்களுக்கான உணவு விநியோகம் (Meals for office staff) போன்றன அடங்கியுள்ளதுடன், chinesedragoncafe.com எனும் இணையத்தளத்தினூடாகவும் Facebook பக்கத்தினூடாகவும் உணவுகளை ஓடர் செய்து கொள்ளக்கூடிய வசதியும் வழங்கப்படுகிறது. 

தமது உணவகங்களை அண்மித்துக் காணப்படும் பிரதேசங்களுக்கு 45 நிமிடங்களினுள் உணவை விநியோகிப்பதற்கான உறுதி மொழியை சைனீஸ் ட்ராகன் கஃபே வழங்குகிறது. சைனீஸ் ட்ராகன் கஃபே சீன உணவு வகைகளுக்கு மேலதிகமாக ஸ்ரீ லங்கன், மொங்கோலியன், தாய்லாந்து மற்றும் பார்பெக்கியு உணவு வகைகளை சகல நிகழ்வுகளுக்கும், ஒன்றுகூடல்களுக்கும் (get-togethers) சகாய விலையில் வழங்குகிறது.