பதில் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகமாக டொக்டர் ஜயசுந்தர பண்டார   நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

இவர் தனது பணியை இன்றிலிருந்து மேற்கொள்வார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாலித மஹிபால உலக சுகாதார அமைப்பின் தென்கிழக்கு ஆசிய வலய நாடுகளுக்கான தொற்றா நோய், இடம்பெயர்வு சுகாதாரம் மற்றும் சுற்றுச்சூழல் சுகாதாரம்  தொடர்பான ஒருங்கிணைப்பாளராக பதவியேற்றதனையடுத்து குறித்த பதில் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் பதவிக்கு  ஜயசுந்தர பண்டார   தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.