மஸ்கெலியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கவரவில பகுதியில் இடம்பெற்ற தீ விபத்தில் நான்கு வர்த்தக நிலையங்கள் சேதமாகியுள்ளது.

கவரவில கிராமத்திற்கருகிலுள்ள கடைதொகுதியில் இன்று மாலை 6.30 மணியளவில் தீ விபத்து சம்பவித்துள்ளது.

பலசரக்கு கடையொன்றில் திடுரென தீ பரவிய நிலையில் தையல் நிலையம் உட்பட களஞ்சியசாலை மற்றும் மூடியிருந்த கடையொன்றுமாக நான்கு  கடைகள் முற்றாக சேதமாகியுள்ளது.

பொலிஸாரும் பிரதேச மக்களும் இணைந்து  சுமார்  இரண்டு மணித்தியலாங்களின் பின்  தீயை கட்டுபாட்டுக்குள்ள கொண்டுவந்துள்ளனர் .

மின்சாரகோளாரே தீ விபத்துக்கான காரணமாக இருக்கலாம் என்றும் தீ விபத்து தொடர்பிலும்  கடை சேதவிபரம் தொடர்பிலும் விசாரணைகளை முன்னெடுப்பதாக மஸ்கெலியா பொலிஸார் தெரிவித்தனர்.