இந்நாட்டில் வேகமாக வளர்ந்து வரும் நிறுவனம் எனும் வகையில் Ceyoka பொறியியல் நிறுவனம், புத்தாக்கம், உயர்ந்த தரம், விசேட வாடிக்கையாளர் சேவை ஆகியவற்றின் மூலம் இந்நாட்டின் பொறியியல் துறையை புதிய பாதையில் வழிநடத்திச் செல்வதற்கான வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

2013 இல் இலங்கையின் பொறியியல் துறையில் காலடி பதித்த Ceyoka பொறியியல் நிறுவனம் கட்டிடங்கள், அதிவேக நெடுஞ்சாலைகள் மற்றும் நீர் விநியோகம் ஆகிய செயற்பாடுகளுக்காக நிர்மாண பயிற்சிகள் மற்றும் அபிவிருத்தி நிறுவனத்தின் (ICTAD) C4 தரத்தை பெற்றுள்ளதுடன், பாலம், நீர் விநியோகம் மற்றும் நிலக்கீழ் நீர் விநியோகம் போன்ற செயற்பாடுகள் மற்றும் தூர்வாருதல், நிலமீட்டல் மற்றும் மழைநீர் வடிகாலமைப்பு செயற்பாடுகளுக்காக C7 தரத்தையும் பெற்றுள்ளமை விசேட அம்சமாகும்.

ISO 9001:2008 தரச்சான்றைப் பெற்றுள்ளதுடன், இலங்கையின் தேசிய நிர்மாண சங்கத்தின் அங்கீகாரத்தைப் பெற்ற Ceyoka நிறுவனம், இயற்கையாகவே கொள்கைகளை பிரயோகித்து நிர்மாணத்துக்கு மேலதிக பெறுமதியை சேர்க்கக்கூடிய திட்டங்களுக்காக தன்னை அர்ப்பணித்து செயலாற்றி வருகிறது.

இந்நிறுவனம் பங்களிப்பு வழங்கும் சகல நிர்மாணங்களும் வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றி, உயர் தரத்தில் பூர்த்தி செய்யும் செயற்பாடுகளின் காரணமாக நிர்மாணத்துறையில் Ceyoka நிர்மாணப் பிரிவு நற்பெயரைப் பெற்றுள்ளது. 

நாளாந்தம் வளர்ச்சியடைந்து வரும் Ceyoka நிர்மாணப் பிரிவு, சரியான வேகத்தில் சரியான திசையில் செயற்திட்டங்களை முன்னெடுத்துச் செல்லக்கூடிய வகையில் அர்ப்பணிப்பான ஊழியர்கள் 86 பேரை தன்னகத்தே கொண்டுள்ளது. திறமைகள், அனுபவங்கள் மற்றும் முறையான பயிற்சிகளைப் பெற்ற ஆலோசகர்கள், பொறியியலாளர்கள், அளவையாளர்கள் மற்றும் செயற்திட்ட முகாமையாளர்கள் அடங்கலாக வெவ்வேறு துறைகளில் பாண்டித்தியம் பெற்ற நிபுணர்கள் பலர் இந்த சேவை அணியில் உள்ளடங்கியுள்ளனர்.

நிர்மாணத்துறையின் சகல பிரிவுகளிலும் தமது அனுபவத்தை உள்வாங்கி Ceyoka நிறுவனம், கட்டிடங்கள் நிர்மாணித்தல், அதிவேக நெடுஞ்சாலைகள், நீர்ப்பாசன கட்டமைப்புகள் மற்றும் நீர் விநியோக கட்டமைப்புகள், நில அபிவிருத்தி செயற்பாடுகள் மற்றும் பாலம் அமைப்பு செயற்பாடுகள் தொடர்பில் செயற்திட்டங்கள் பலவற்றுக்கு தமது பங்களிப்பை வழங்குகின்றன.

வாரியபொல நீர்ப்பாசன பிரேரணை செயற்திட்டத்துக்கான உள்ளக நீர்த்தேக்கங்களை நிர்மாணித்ததுடன் தமது பயணத்தை ஆரம்பித்த Ceyoka நிறுவனம், அன்று முதல் இன்றுவரை இந்நாட்டின் அத்தியாவசியமான செயற்திட்டங்கள் பலதுக்கு தமது விசேடத்துவ சேவைகளை பெற்றுக் கொடுக்க தன்னை அர்ப்பணித்துள்ளது.

நுகேகொட ரத்தனபிட்டிய வாய்க்கால் நிர்மாணிப்பது, கண்டி பிரதேசத்தில் இணைப்பு விஸ்தரிப்பு செயற்திட்டத்துக்கு விநியோக நீடிப்புகளை நிறுவுதல், கொழும்பு 07 பகுதியில் கல்ஃபர்ட் கிரெசன்ட்டில் மழை நீர் வடிகட்டல் செயற்திட்டம் மற்றும் கம்புராவெல பாலிந்தநுவர பிரதேச சபைக்கான நீர் விநியோக கட்டமைப்பை நிறுவுதல் போன்றன இந்த அபிவிருத்தித் திட்டங்களில் உள்ளடங்கியுள்ளன.

இந்த செயற்திட்டங்களின் மொத்தப் பெறுமதி சுமார் 120 மில்லியன் ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது. தேசத்தின் நிர்மாணத்துறையில் முன்னோடியாக திகழும் நவலோக கொன்ஸ்ட்ரக்ஷன்ஸ் நிறுவனத்தின் புகழ்பெற்ற நாமத்தின் கீழ் நாட்டில் முன்னெடுக்கப்படும் பல செயற்திட்டங்களில் இணைந்து கொள்வதற்கு Ceyoka நிறுவனத்துக்கு வாய்ப்புக் கிட்டியுள்ளது.

மாலபே லங்கா க்ளியர் நிறுவனத்தின் நான்கு மாடிக் கட்டிடத்தின் நிர்மாணப் பணிகள், கொழும்பு துறைமுகத்தின் உள்ளக துறைமுக வீதிகளில் வடிகாலமைப்பு கட்டமைப்பை நிறுவுதல் மற்றும் தார் இடுதல், மொரட்டுவை பல்கலைக்கழகத்தின் கட்டிடக்கலை பீடத்தின் நிர்மாணப்பணிகளின் நான்காம் கட்டத்தை முன்னெடுப்பது, பிலியந்தல காணி அபிவிருத்தி செயற்திட்டம், அத்தனகலு ஓயா குறுக்காக மாதுருபிட்டிய பாலம் நிர்மாணிப்பது போன்றன இந்த செயற்திட்டங்களில் முக்கிய இடத்தை வகிக்கின்றன.

நவலோக கொன்ஸ்ட்ரக்ஷன்ஸ் நிறுவனத்துடன் கைகோர்த்துள்ளதன் மூலமாக Ceyoka நிறுவனம் இந்நாட்டின் நிர்மாணத்தில் துறையில் காணப்படும் சவால்களை வெற்றிகரமாக எதிர்கொண்டு முன்நோக்கி பயணிக்கிறது. புத்தாக்கமான பொறியியல் பாரம்பரியத்தின் மூலம் போட்டிகரமான விலைகளின் கீழ் உயர் தரத்திலமைந்த சேவையை பெற்றுக் கொடுக்கக்கூடிய திறனையும் Ceyoka பொறியியல் பிரிவு தன்னகத்தே கொண்டுள்ளது.