நாட்டில் கடந்த ஆண்டில் மாத்திரம் 370 வெளிநாட்டவர்கள் நாடு கடத்தப்பட்டுள்ளனர்.

சட்டவிரோதமான முறையில் நாட்டில் தங்கியிருந்த 45 நாடுகளைச் சேர்ந்த 370 பேரே  நாடு கடத்தப்பட்டுள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.

குறிப்பாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் மேற்கொண்ட சோதனையில் வெளிநாட்டவர்கள் பல்வேறு காரணங்களுக்காக நாட்டில் தங்கியிருந்ததாகவும் சுமார் 728 வெளிநாட்டவர்கள் தொடர்பில் 700க்கும் மேற்பட்ட வழக்குள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் திணைக்களம் அறிவித்துள்ளது.

கடந்த ஜனவரி மாதம் முதல் டிசம்பவம் மாதம் வரையிலான ஒருவருட காலப்பகுதியில் கைது செய்யப்பட்டவர்களில் இந்திய நாட்டைச் சேர்ந்தவர்களே (154 பேர்) அதிகமாக கைது செய்யப்பட்டு நாடு கடத்தப்பட்டுள்ளனர்

இதேவேளை 51 சீன நாட்டவர்களும், 47 பாகிஸ்தானியர்களும் நேபாளத்தைச் சேர்ந்த 33 பேரும் தாய்லாந்தைச் சேர்ந்த 25 பேரும் நாடுகடத்தப்பட்டுள்ளனர்.

மேலும் கொரியா, சவூதி, தென்னாபிரிக்கா மற்றும் அவுஸ்ரேலிய நாடுகளைச் சேர்ந்தவர்களும் நாடுகடத்தப்பட்டுள்ளாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.