கல்லீரல் என்பது எம்முடைய உடலில் சுரக்கும் இரண்டாவது பெரிய சுரப்பி. ஆரோக்கியமான வாழ்க்கைக்கு கல்லீரலின் செயல்பாடு இன்றியமையாதது. இதன் செயல்பாட்டை பாதிக்கும் காரணிகளில் ஒன்றாக திகழ்கிறது கல்லீரல் புற்றுநோய். தற்போது கல்லீரலில் புற்று நோய் வந்துவிட்டால் ரீனியம் மருத்துவம் மூலம் அதனை குணப்படுத்த இயலும்.

அதற்கு முன் கல்லீரலில் புற்று நோய் பாதிப்பினை தொடக்க நிலையிலேயே கண்டறியவேண்டும். அதற்கு தற்போது லீனியர் ஓக்ஸிலேரேற்றர் என்ற கருவிமூலம் துல்லியமாக கண்டறிய இயலும். அத்துடன் இத்தகைய புற்று நோய் பாதிப்பின் அறிகுறியையும் அறிந்துகொள்ளுங்கள். நீங்கள் வெளியேற்றும் சிறுநீரின்நிறம் அடர் வண்ணத்தில் இருப்பது அல்லது அருவெருப்பான துர்நாற்றம் அடிப்பது, உடல் எடை தீடிரென்று குறைவது, காரணமற்ற வாந்தி மற்றும் குமட்டல் உணர்வு, சோர்வு, கல்லீரல் பெரிதாவது, சருமத்தில் அரிப்பு, வயிற்று வலி, வயிற்றுப் பொருமல், கண்கள் மஞ்சளாக மாறுவது உள்ளிட்ட அறிகுறிகள் தோன்றினால் உடனடியாக பரிசோதனை செய்து கொண்டு அவைகல்லீரல் புற்று நோயா? என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளவேண்டும். அதன் பிறகு சிகிச்சைகளைத் தொடரவேண்டும்.

தற்போதுள்ள நவீன சிகிச்சைகளான ரீனியம் மருத்துவம், மாலிக்யூலர் ஓன்காலஜி, ட்ரூபீம் ஹை எனர்ஜி லீனியர் ஓக்ஸிலேரேற்றர், ஹை டோஸ் ரேட் பிராக்கி ட்ரீட்மெண்ட் போன்ற சிகிச்சைகளால் இதனை குணப்படுத்த இயலும்.

டொக்டர் ராம்ரத்தன் ராய்.M.S.,

தொகுப்பு அனுஷா.

தகவல் : சென்னை அலுவலகம்