பாகிஸ்­தானில் நால்­வ­ருக்கு செவ்­வாய்க்­கி­ழமை தூக்­கி­லிட்டு மர­ண­தண்­டனை நிறை­வேற்­றப்­பட்­டுள்­ளது. தற்­கொலைக் குண்டுத் தாக்­கு­தல்­களுக் கும் படை­யினர் மீதான தாக்­கு­தல்­க­ளுக்கும் உத­வி­ய­ளித்­தமை தொடர்பில் மேற்­படி நால்­வ­ருக்கும் இரா­ணுவ நீதி­மன்­றத்தால் கடந்த ஏப்ரல் மாதம் மர­ண­தண்­டனை விதித்து தீர்ப்­ப­ளிக்­கப்­பட்­டி­ருந்­தது. அவர்­க­ளுக்கு வட மேற்கு நக­ரான கோகத்தில் மர­ண­தண்­டனை நிறை­வேற்­றப்­பட்­டது. மர­ண­தண்­டனை நிறை­வேற்­றத்தின் பின்னர் அந்தக் கைதி­களின் சட­லங்கள் அவர்­க­ளது உற­வி­னர்­க­ளிடம் கைய­ளிக்­கப்­பட்­டுள்­ளன. இந்­நி­லையில் ஒரு வரு­டத்­துக்கும் குறைந்த காலப் பகு­தியில் பாகிஸ்­தானில் 300 பேருக்கு மரணதண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளதாக மனித உரி மைக் குழுக்கள் தெரிவிக்கின்றன.