இசைப்புயல் ஏ. ர். ரஹ்மானின் hiphop இசைக்கலைஞரான ADK - ஆர்யன் தினேஷ் கனகரத்தினம் அறிமுகம் செய்த 'டீ கட பசங்க' இசைக்குழுவினரின் ஆல்பத்தின் முதலாவது பாடல் வெளியாகி மக்கள் மத்தியில் பாரிய வரவேற்பினை பெற்றுள்ளது.

இப்பாடல் 'டீ கட பசங்க' ஆல்பத்தின்  title பாடலாகும். இப்பாடலை ADK - ஆர்யன் தினேஷ் கனகரத்தினம் தயாரித்துள்ளார்.  

குறித்த பாடலினை டீ கட பசங்க இசையமைப்பாளர் ஆர். ஜீவானந்தன் இசையமைத்துள்ளார். பாடகர்கள் ராப் இசைக்கலைஞர்கள் கிர்ஷ் மனோஜ், ரதீஷ், ஜீவ் ஆகியோர் இப்பாடலை பாடியுள்ளனர். பாடல் வரிகள் டீ கட பசங்க குழுவினரால் எழுதப்பட்டுள்ளது. இப்பாடலுக்கு டியோ (ஆவுஸ்திரேலியா) இசைக்கலவை செய்துள்ளார். பாடலுக்கான இசை - காணொளி இயக்குனர் கிரண் பிரஷாத்தால்  (மலேஷியா) இயக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.