காலி - நுகதுவ பகுதியில் இன்று இடம்பெற்ற கோர விபத்தொன்றில் இரு இளைஞர்கள் பரிதாபமாக பலியாகியுள்ளனர்.

குறித்த விபத்து இன்று அதிகாலை இடம்பெற்றுள்ளது.

22 மற்றும் 18 வயதான இரு இளைஞர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

காரொன்றில் இரண்டு மோட்டார் சைக்கிள்கள் மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

உயிரிழந்த இளைஞர்களின் சடலம் கராப்பிட்டிய வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைகளுக்காக வைக்கப்பட்டுள்ளது.

விபத்து தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.