தொழில் நிமிர்த்தம் நேற்று பகல் 2 மணியளவில்  கடலுக்கு சென்ற அமிர்தகழி  கிராமத்தைச் சேர்ந்த மீனவர்களின் படகு கடலில் மூழ்கியுள்ளது.

படகில் சென்ற மீனவர்கள் 3  பேரும் தெய்வாதீனமாக உயிர் தப்பியுள்ளார்.

படகில் சென்ற மீனவர்களான ரஞ்சித், சபேஷ், நிரோஷான் ஆகிய  மூன்று மீனவர்கள் உயிர் தப்பியதுடன் படகு மற்றும் இயந்திரத்தின் பல பாகங்களும்  பாரிய சேதமடைந்துள்ளது.  

தற்போது நிலவும்  மிகவும் கடுமையான சீர் அற்ற காலநிலை  கடல் கொந்தளிப்பிலும் தங்களது குடும்பங்களின்  வறுமையின் காரணமாக தாங்கள் கடலுக்கு சென்றதாக உயிர் தப்பிய மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.