புதிய அரசியல் சாசனத்திற்கான சரித்திர பயணம் (03)

Published By: Raam

01 Jan, 2017 | 04:35 PM
image

(ஆர்.ராம்)

புதிய அர­சியல் சாசன உரு­வாக்­கத்­திற்­காக அர­சி­ய­ல­மைப்புச் சபையால் ஸ்தாபிக்­கப்­பட்­டுள்ள பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க தலை­மை­யி­லான வழி­ந­டத்தல் குழுவின் அங்­கத்­த­வரும் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் ஊட­கப்­பேச்­சா­ளரும் யாழ்.மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான எம்.ஏ.சுமந்­திரன் எதிர்­பார்ப்பை ஏற்­ப­டுத்­தி­யுள்ள புதிய அர­சி­ய­ல­மைப்பின் விட­ய­தா­னங்கள், விட்­டுக்­கொ­டுப்­பற்ற மன­நி­லையில் உள்ள தென்­னி­லங்கை தலை­வர்­க­ளி­ட­மி­ருந்து தேசிய பிரச்­சி­னைக்­கான தீர்வு புதிய சாச­னத்­தி­னூ­டாக கிடைக்­குமா என இயல்பாக எழுகின்ற வினாக்கள், பொதுமக்களின் சந்தேகங்கள் தொடர் பில் கருத்துக்களை பதிவு செய்தார்.

கேள்வி: -அர­சி­ய­ல­மைப்பு பணிகள் இடம்­பெற்று வரும் இத்­த­ரு­ணத்தில் புதிய அர­சிய­ல­மைப்பு உரு­வாக்­கப்­ப­டு­கின்­றதா? தற்­போ­தைய அர­சி­ய­ல­மைப்பில் திருத்­தங்கள் மேற் ­கொள்­ளப்­ப­டு­கின்­றதா? 

பதில்:- இந்த ஆண்டு ஜன­வரி மாதம் 9ஆம் திகதி பாரா­ளு­மன்­றத்தில் தீர்­மானம் நிறை­வேற்­றப்­பட்­டது. பாரா­ளு­மன்றம் அர­சி­ய­ல­மைப்பு சபை­யாக செயற்­ப­டு­வது தொடர்­பான தீர்­மா­னத்தின் பிர­காரம் இந்த நாட்­டுக்கு முழு­மை­யான அர­சி­ய­ல­மைப்பு வரை­பொன்றை வரை­யப்­ப­ட­வேண்­டு­மென்றே கூறப்­பட்­டுள்­ளது. ஆகவே அது தொடர்­பான சந்­தே­கங்கள் யாருக்கும் இருக்க வேண்­டிய அவ­சி­ய­மில்லை. 

அத்­தோடு முழு­மை­யான அர­சி­ய­ல­மைப்பு வரைபு வரை­யப்­பட்­டதன் பின்னர் பாரா­ளு­மன்­ற­த்தில் மூன்­றிலி­ரண்டு பெரும்­பான்மை கிடைத்தால் அந்த வரைபு  அமைச்­ச­ர­வைக்கு அனுப்­பப்­படும்.  அமைச்­ச­ரவை சாதா­ர­ண­மாக சட்ட­மொன்றை இயற்­று­வ­தற்­கான படி­மு­றை­களை கையாண்டு அதனை வர்த்­த­மா­னியில் பிர­சு­ரிக்கும். அதன்

பின்னர் பாரா­ளு­மன்­றத்தில் மூன்­றி­லிரண்டு பெரும்­பான்மை கிடைக்­கப்­பெற்­றதை­ய­டுத்து மக்­களின் அனு­ம­திக்­காக பொது­ஜன வாக்­கெ­டுப்­பிற்கு விடப்­ப­டு­மென அத்­தீர்­மா­னத்தில் சொல்­லப்­பட்­டி­ருக்­கின்­றது.  

கேள்வி:- தற்போ­தைய சூழலில் புதிய அர­சி­ய­ல­மைப்பை உரு­வாக்கும் பணிகள் எந்த மட்­டத்தில் உள்­ளது?

பதில்:- அர­சி­ய­ல­மைப்பு பேரவை ஸ்தாபிக்­கப்­பட்டு வழி­ந­டத்தல் குழு­வொன்றை நிய­மித்­தது. வழி­ந­டத்தும் குழு தான் அர­சி­ய­லமைப்பு வரைபை உரு­வாக்கி அர­சி­ய­ல­மைப்பு பேர­வைக்கு சமர்ப்­பிக்க வேண்­டிய பொறுப்பைக் கொண்­டி­ருக்­கின்­றது. 

வழி­ந­டத்தல் குழு­வா­னது 12விட­யங்­களை ஆரம்­பத்­தி­லேயே அடை­யாளம் கண்டு கொண்­டது. அதில் அடிப்­படை உரி­மைகள், நீதித்­துறை, சட்டம் மற்றும் ஒழுங்கு, பொது நிதி, பொதுச் சேவை, மத்­திய அர­சாங்­கத்­துக்கும் - மாகாண சபை­க­ளுக்கும் இடை­யி­லான உறவு ஆகிய ஆறு விட­யங்­களை அடை­யாளம் கண்டு அவற்றை ஆறு உப­கு­ழுக்­க­ளிடத்தில் பாரப்­ப­டுத்­தி­யி­ருந்­தது. அந்த உப­கு­ழுக்கள் அறிக்­கை­களை சமர்­ப்பித்­துள்­ளன. 

எஞ்­சி­யுள்ள ஆறு விட­யங்கள் தொடர்­பா­கவும் வழி­ந­டத்தும் குழு தானா­கவே பேச்­சு­வார்த்­தையில் ஈடு­பட்டு அவை நிறை­வ­டைந்த பின்னர் இடைக்­கால அறிக்­கை­யொ­ன்றை சமர்ப்­பிப்­ப­தாக இருந்­தது. டிசம்பர் மாதம் 10ஆம் திகதி அந்த அறிக்கை சமர்ப்­பிக்­கப்­ப­டு­வதாக இருந்­தாலும் கூட சில கட்­சி­களின் வேண்­டு­கோளுக்கிணங்க  தற்­போது தாம­தப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது.

எனினும் எதிர்வரும் ஜன­வரி மாதம் 9ஆம், 10ஆம் திகதிகளில் விவா­தங்கள் நடை­பெ­று­வ­தற்கு முன்­ன­தாக அந்த அறிக்­கைகள் வெளியி­டப்­ப­டு­மென நாம் நம்­பு­கின்றோம். அனைத்து விட­யங்­களும் பேசப்­பட்டு தீர்­மா­னிக்­கப்­பட்­டு­விட்­ட­தாக கூற­மு­டி­யாது. சில முக்­கி­ய­மான விட­யங்கள் சம்­பந்­த­மாக தீர்­மா­னங்கள் இது­வ­ரையில் மேற்கொள் ளப்படாதிருக்கின்ற­போதும் அவ்­வி­ட­யங் கள் சம்­பந்­த­மாக நீண்ட பேச்­சு­வார்த்தை நடத்­தப்­பட்­டி­ரு­கின்­றது. 

அந்த பேச்­சுக்­களின் அடிப்­ப­டையில் வெவ்­வேறு தெரி­வுகள் மக்கள் முன்­பாக சமர்ப்­பிக்­கப்­ப­டலாம் என்ற தீர்­மானம் எடுக்­கப்­பட்­டி­ருக்­கின்­றது. ஆகவே இடைக்­கால அறிக்­கையை வெளியி­டு­வ­தற்கு அனைத்து கட்­சி­களும் இணங்கும் பட்­சத்தில் எந்த மாதி­ரி­யான அர­சி­ய­ல­மைப்பு சட்­டத்தை அனை­வரும் எதிர்­பார்த்­தி­ருக்­கின்றோம் என்­பது தெரி­ய­வரும். 

கேள்வி:- புதிய அர­சி­ய­ல­மைப்பு தமிழ் தேசிய இனப்­பி­ரச்­சி­னைக்கு தீர்­வொன்றை பெற்­றுக்­கொ­டுக்கும் என எந்த அடிப்­ப­டையில் எதிர்­பார்ப்­புக்­களைக் கொண்­டி­ருக்­கின்­றீர்கள்? 

பதில்:- இந்த நாட்டில் உரு­வாக்­கப்­பட்ட குடி­ய­ரசு அர­சியல் யாப்­புக்கள் இரண்டும் தமிழ் மக்கள், தமிழ் பேசும் மக்­களை புறந்­தள்­ளியே உரு­வாக்­கப்­பட்­டுள்ளன. இனப்­ பி­ரச்­சினை இவ்­வ­ளவு பூதா­க­ரமாக எழு­வ ­தற்கு அவைஅடிப்­ப­டையாக இருந்தன. அவ்­வா­றான நிலையில் புதிய அர­சி­ய­ல­மைப்­பா­னது தேசிய பிரச்­சி­னைக்கு தீர்வை அளிப்­ப­தையே பிர­தான இலக்­காக கொண்டு உரு­வாக்­கப்­ப­டு­கின்­றது. உரு­வாக்கப்­படும் அர­சி­ய­ல­மைப்புச் சட்­ட­மா­னது தேசிய பிரச்­சி­னைக்கு தீர்வை வழங்காது ஏனைய விட­யங்­களை கொண்­டி­ருக்­கு­மாயின் அதனை ஏற்­றுக்­கொள்ள முடி­யாது. 

கேள்வி:- உப­கு­ழுக்­களில் முரண்­பா­டான விட­யங்கள் முன்­மொ­ழி­யப்­பட்­ட­னவா? அவை உள்­வாங்­கப்­பட்­டுள்­ள­னவா? 

பதில்:- அனைத்துக் கட்­சி­களும் உப­கு­ழுக்­களில் அங்கம் வகிக்கின்றன. சில உப­கு­ழுக்­களில் பொது எதி­ர­ணி­யினர் தங்­க­ளு­டைய மாறு­பட்ட கருத்­துக்­களை முன்­வைத்­தனர். அவை அந்­தந்த அறிக்­கையில் குறிக்­கப்­பட்­டுள்­ளன. சில உப­கு­ழுக்­களில் பொது எதி­ர­ணி­யினர் வழி­ந­டத்தல் குழு­விற்கு நேர­டி­யாக அறிக்­கையை சமர்ப்­பிப்­ப­தாக கூறி­யி­ருந்­தனர். 

உப­கு­ழுக்­களின் அறிக்­கைகள் கிடைத்­ததன் பின்னர் வழி­ந­டத்தும் குழு­வா­னது மாறு­பட்ட கருத்­துக்­களை நேர­டி­யாக அழைத்து அவர்­க­ளி­டத்தில் கருத்­துக்­களை கேட்­ட­றிந்­தது. அதன்­போதும் அறிக்­கை­யொன்றின் மூல­மாக தமது கருத்­துக்­களை வழங்­குவோம் எனக் கூறி­யி­ருக்­கின்ற போதும்

தற்­போது வரையில் அவர்கள் அறிக்­கையை கைய­ளித்­தி­ருக்­க­வில்லை. 

ஆகவே உப­கு­ழுக்­களின் அறிக்­கைகள் அனைத்து கட்­சி­களின் கருத்­துக்­களை உள்­ள­டக்­கி­ய­தா­கவும் அதே­நேரம் வழி­ந­டத்தல் குழுவில் அந்த அறிக்­கை­க­ளுக்கு எதிர்ப்­புக்கள் இல்­லாத நிலை­யிலே தான் அந்த அறிக்­கைகள்  பேர­வைக்கு சமர்ப்­பிக்­கப்­பட்­டுள்­ளன.

கேள்வி:- தேர்தல் முறைமை தொடர்­பாக எவ்­வா­றான இணக்­கப்­பா­டுகள் எட்­டப்­பட்­டி­ருக்­கின்­றன?

பதில்:- தேர்தல் முறை­மையை வழி­ந­டத்தும் குழுவே கையா­ளு­கின்­றது. அந்த விடயம் சம்­பந்­த­மாகத் தான் முத­லா­வ­தாக பேசப்­பட்­டது. தேர்தல் முறைமை சம்­பந்­த­மாக இறுதி தீர்­மானம் எடுக்­கப்­ப­ட­வில்லை என்­றாலும்கூட தேர்தல்முறைமை சம்பந்தமாக உள்ள அடிப்­படைக் கொள்­கைகள் சார்பில் இணக்கம் ஏற்­பட்­டுள்­ளது. குறிப்­பாக கோட்­பாட்­ட­ளவில் ஒரு கலப்பு தேர்தல் முறை­மைக்கு சகல அர­சியல் கட்­சி­களும் இணங்­கி­யுள்­ளன. 

எந்­தெந்த விகி­தா­சா­ரத்தில் தொகுதி முறையும், பிர­தி­நி­தித்­துவ முறையும் அமை­ய­வேண்டும் என்­பதில் இணக்கம் ஏற்­பட்­டுள்­ளது. அத்­தோடு இரண்­டா­வது சபையை ஸ்தாபிப்­பது தொடர்­பா­கவும் இணக்­கப்­பாடு எட்­டப்­பட்­டுள்­ளது. 

இரண்­டா­வது சபையை ஸ்தாபித்தல் என்ற விட­யத்தில் குறிப்­பாக மாகாண சபை பிர­தி­நி­தித்­து­வத்­திற்கு முக்­கி­யத்­துவம் அளிக்­கப்­பட்­டுள்­ளது. 

கேள்வி: -இரண்­டா­வது சபை­யா­னது எவ்­வாறு ஸ்தாபிக்­கப்­படும்?

பதில்:-இரண்­டா­வது சபை எவ்­வாறு அமைய வேண்டும் என்­பது குறித்து இது­வ­ரையில் முடி­வான தீர்­மானம் எடுக்­கப்­ப­ட­வில்லை. இருப்­பினும் ஒவ்­வொரு மாகாண சபை­யி­லி­ருந்தும் தலா ஐவர் தெரிவு செய் ­யப்­ப­டு­வார்கள். அந்த ஐவரில் முத­ல­மைச் சர் நிச்­ச­ய­மாக இருக்க வேண்டும். அவர் உள்­ள­டங்­க­லாக மாகாண அமைச்­ச­ரவை அந்­தஸ்து இல்­லா­த­வர்­களும் இக்­கு­ழுவில் இருக்க முடியும் என சிபாரிசு செய்­யப்­பட்­ டுள்­ளது. அந்த அடிப்­ப­டையில் முத­ல­மைச் சர் உட்­பட தலா ஐவர் கொண்ட குழு­வினர் இரண்­டா­வது சபைக்கு தெரிவு செய்­யப்­ப­டு­வார்கள். 

அதனைவிட பாரா­ளு­மன்ற தீர்­மா­னத்­திற்கு அமை­வாக பத்து உறுப்­பி­னர்­கள் தெரிவு செய்­யப்­ப­டு­வார்கள் அவ்­வாறு தெரிவு

செய்­யப்­ப­டுப­வர்கள், பல்­வேறு துறை­களில் தமது திற­மை­களை காட்­டி­ய­வர்கள், கட்சி அல்­லது தேர்தல் அர­சி­ய­லுக்குள் வர விரும்­பா­த­வர்கள் ஆகி­யோரின் பங்­க­ளிப்­பையும் பெற்­றுக்­கொள்ளும் வித­மாக தெரி­வுகள் இடம்­பெ­று­வ­தற்கு சிபார்சு செய்­யப்­பட்­டுள்­ளது. 

கேள்வி:- புதிய அர­சி­ய­ல­மைப்பில் நிறை­வேற்று அதி­கார ஜனா­தி­பதி முறைமை ஒழிக்­கப்­படும் என கூறப்­பட்­டாலும் அவ்­வா­றான அதி­கா­ரங்கள் அனைத்­தையும் பாரா­ளு­மன்­றத்­திற்கு வழங்­கு­வதன் ஊடாக பிர­தமர் நிறை­வேற்று அதி­கா­ரத்தைக் கொண்­ட­வ­ரா­கின்­றாரே?

பதில்:- நிறை­வேற்று அதி­கார ஜனா­தி­பதி முறை­மை நீக்­கப்­ப­ட­வேண்டும் என்ற கருத்துக்கு அனைத்துக் கட்­சி­களும் இணங்­கி­யுள்­ளன. அதன்­பி­ர­காரம் நிறை­வேற்று அதி­கா­ரத்தை நீக்­கி­விட்டு அதற்கு மாற்­றீ­டாக உள்­ளீர்க்­கப்­ப­ட­வுள்ள முறை­மைக்­காக மூன்று யோச­னைகள் முன்­மொ­ழி­யப்­பட்­டுள்­ளன.

முத­லா­வ­தாக பிரித்­தா­னி­யாவில் பின்­பற்­றப்­படும் வெஸ்­மி­னிஸ்டர் முறைமை காணப்­ப­டு­கின்­றது. இரண்­டா­வ­தாக பிர­த­மரை நேர­டி­யாக மக்கள் தெரிவு செய்­கின்ற முறை காணப்­ப­டு­கின்­றது. இந்த முறை­மையை தொடர்பில் தான் அச்­ச­ம­டை­கின்­றார்கள். நிறை­வேற்று அதி­கார ஜனா­தி­பதி முறைமை நீக்­கப்­பட்­டாலும் அதற்கு ஈடாக பிர­தமர் நிறை­வேற்று அதி­கா­ரத்தை கொள்­கின்றார் என அச்சம் வெளியி­டு­கின்­றார்கள். அது நியா­ய­மா­ன­தொரு அச்­ச­ம­டையக் கூடிய விடயம். 

மூன்­றா­வ­தாக முழு­மை­யாக வெஸ்­மி­னிஸ்டர் முறை­மையும் இல்­லாத இடைப்­பட்ட முறை­யொன்று சிபார்சு செய்­யப்­பட்­டுள்­ளது. ஆதா­வது பாரா­ளு­மன்ற தேர்தல் நடை­பெ­று­வ­தற்கு முன்­ன­தாக ஒவ்­வொரு கட்­சியும் தங்­க­ளு­டைய கட்சி சார்பில் பிர­தமர் வேட்­பா­ளர் யார் என்­பதை அறி­விக்க வேண்டும். இம்­மு­றை­மைகள் தொடர்பில் அர­சி­ய­ல­மைப்பு பேர­வையில் விரி­வாக ஆரா­யப்­படும். 

கேள்வி:- அர­சி­ய­ல­மைப்பு நீதி­மன்­ற­மொன்றை நிறு­வு­வ­தற்­கான சிபார்சு செய்­யப்­பட்­டுள்ள நிலையில் அதற்­கான சாத்­தி­யப்­பா­டுகள் எவ்­வா­றி­ருக்­கின்­றன? 

பதில்:- இலங்­கையில் அர­சி­ய­ல­மைப்பு நீதி­மன்றம் காணப்­பட்­டி­ருக்­கின்­றது. 1972ஆம் ஆண்டு அர­சி­ய­ல­மைப்பின் பிர­காரம் அர­சி­ய­ல­மைப்பு நீதி­மன்றம் உரு­வாக்­கப்­பட்டு சிறப்­பாக முன்­னெ­டுக்­கப்­பட்­டுள்­ளது. ஆகவே இதனை சாத்­தி­ய­மற்ற விட­ய­மாக சொல்ல முடி­யாது. 

என்­னு­டைய தனிப்­பட்ட நிலைப்­பாட் டின் பிர­காரம், உச்ச நீதி­மன்றம் வழக்­கு­க­ளி­னு­டைய இறுதி நீதி­மன்­ற­மாக இறுதி மேன்­மு­றை­யீ­டு­களை கையா­ளு­கின்ற நீதி­மன்­ற­மாக இருக்கும். 

அர­சி­ய­ல­மைப்பு சம்­பந்­த­மான விட­யங்­களை, சட்ட மூலங்கள் சம்­பந்­த­மான விட­யங்­களை வியாக்­கி­யா­னப்­ப­டுத்­து­வ­தற்கு, பொருள்­கோ­டல்­களை கொடுப்­ப­தற்கு மத்­திக்கும் மாகா­ணத்­திற்கும் அல்­லது மாகா­ணங்­க­ளுக்­கி­டையில் சிக்­க­ல்கள் ஏற்­படும் பட்­சத்தில் தீர்ப்­ப­தற்­காக உயர் நீதி­மன்றம் செயற்­ப­டு­வதை விடவும் அதற்­கென விசேட நீதி­மன்றம் இருப்­பது சிறந்­தது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

'ஆரம்பிக்கலாமா?' : தமிழை கையிலெடுத்துள்ள பிரதமர்...

2024-04-17 19:36:36
news-image

சர்வதேச நீதிமன்றத்தில் ஆர்மேனியா - அஸர்பைஜான்...

2024-04-17 19:37:33
news-image

சிங்களவர்களாக ஒருங்கிணையும் இந்தியத் தமிழர் –...

2024-04-17 18:00:59
news-image

பிரித்தானியாவில் ஆளுங்கட்சி தோல்வி? சொந்த தொகுதியில்...

2024-04-17 11:04:13
news-image

பரந்த கோட்பாடுகளில் இருந்து நடைமுறையில் பிரச்சினைகள்...

2024-04-16 16:00:03
news-image

ஈரானின் அதிரடி தாக்குதல் ; இஸ்ரேல்...

2024-04-16 10:56:59
news-image

ஜனாதிபதி தேர்தலில் அரசியல் கணக்குகள்

2024-04-16 01:48:16
news-image

ஜனநாயக மக்கள் காங்கிரஸ் தேசிய கட்சியாக...

2024-04-15 19:01:13
news-image

மறுமலர்ச்சியை ஏற்படுத்த வணிக மறுமலர்ச்சி அலகு

2024-04-15 18:55:41
news-image

ரோஹிங்யா முஸ்லிம்களின் உதவியை நாடும் மியன்மார்...

2024-04-15 18:51:43
news-image

சிறிய அயல் நாடுகளின் சோதனைக் காலம்?

2024-04-15 18:49:22
news-image

திரிசங்கு நிலையில் தமிழ் அரசு கட்சி

2024-04-15 18:46:22