ஹிரு­ணிகா விவ­கா­ரத்தில் நான் தலை­யி­டவில்லை

Published By: Robert

30 Dec, 2015 | 09:26 AM
image

பாரா­ளு­மன்ற உறுப்­பினர் ஹிரு­ணிகா பிரே­மச்­சந்­திர விவ­கா­ரத்தில் நான் எந்த விட­யத்­திலும் தலை­யி­ட­வில்லை. அவ்­வாறு பொலிஸ் விவ­கா­ரத்தில் நான் ஒரு­போதும் தலை­யி­டு­வ­தில்லை என்று அமைச்­ச­ரவை பேச்­சா­ளரும் அமைச்­ச­ரு­மான ராஜித சேனா­ரட்ண தெரி­வித்தார்.

எனது சொந்த ஊரில் கூட நான் இவ்­வாறு செயற்­பட்­டது கிடை­யாது. எனது ஆத­ர­வா­ளர்­க­ளுக்கு ஏதா­வது பிரச்­சினை வந்­தாலும் பொலி­ஸாரின் விவ­கா­ரத்தில் நான் தலை­யிடமாட்டேன் எனவும் அவர் குறிப்­பிட்டார்.

அர­சாங்க தகவல் திணைக்­க­ளத்தில் நேற்று நடை­பெற்ற விசேட செய்­தி­யாளர் மாநாட்டில் கலந்து கொண்டு கருத்து வெளி­யி­டு­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு கூறினார்.

அமைச்சர் மேலும் குறிப்­பி­டு­கையில்

கேள்வி:- தற்­போ­தைய அர­சாங்கம் தொடர்­பா­கவும் குற்­றச்­சாட்­டுக்கள் முன்­வைக்­கப்­ப­டு­கின்­றதே?

பதில்: அவ்­வாறு முன்­வைக்­கப்­படும் குற்­றச்­சாட்­டுக்கள் தொடர்பில் விசா­ரணை நடை­பெ­று­கின்­றது. அது­மட்­டு­மன்றி சில தவ­றுகள் நடை­பெ­றாமல் தடுக்­கப்­ப­டு­கின்­றன. கடந்த ஆட்­சிக்­கா­லத்தில் அவ்­வாறு இருக்­க­வில்லை.

கேள்வி:- நீங்கள் ஹிரு­ணிகா விவ­கா­ரத்தில் தலை­யிட்­ட­தாக கூறப்­ப­டு­கின்­றது.

பதில்:- ஹிரு­ணிகா விவ­கா­ரத்தில் நான் எந்­த­வ­கை­யிலும் தலை­யி­ட­வில்லை. அந்த சம்­பவம் இடம்­பெற்­ற­தாக கூறப்­படும் போது நான் இலங்­கையில் இருக்­க­வில்லை. அது­மட்­டு­மன்றி நான் இவ்­வா­றான விவ­கா­ரங்கள் தொடர்பில் பாது­காப்பு தரப்­பி­னரின் செயற்­பாட்டில் தலை­யிட மாட்டேன். எனது சொந்த ஊரில் கூட நான் இவ்­வாறு செயற்­பட்­டது கிடை­யாது. எனது ஆத­ர­வா­ளர்­க­ளுக்கு ஏதா­வது பிரச்­சினை வந்­தாலும் பொலி­ஸாரின் விவ­கா­ரத்தில் நான் தலை­யிட மாட்டேன்.

கேள்வி:- வெள்­ளைவேன் கலா­சாரம் முடிந்து

டிபென்டர் கலா­சாரம் வந்­துள்­ளாக கூறப்­ப­டு­கின்­றதே?

பதில்:- ஒரு தனிப்­பட்ட சம்­ப­வத்தை வைத்துக் கொண்டு இவ்­வாறு கூறு­கின்­றனர். இதில் அர­சாங்கம் சம்­பந்­தப்­ப­ட­வில்லை.

கேள்வி:- சர்­வ­தேச பாடகர் ஹென்­றிகே வின் இசை நிகழ்வில் இளைஞர், யுவ­திகள் நடந்து கொண்ட விதம் குறித்து அரசின் கருத்து என்ன?

பதில்:- அதில் இளை­ஞர்கள் எவரும் எதுவும் செய்­ய­வில்லை. இது தொடர்பில் ஜனா­தி­பதி அர­சாங்­கத்தின் நிலைப்­பாட்டை அறி­வித்­துள்ளார். இவ்வாறு சர்வதேச இசை நிகழ்ச்சிகள் நடத்தப்படுவதில் தவறில்லை. ஆனால் எமது நாட்டின் கலாசாரம் பாதுகாக்கும் வகையில் இந்த நிகழ்வுகள் நடத்தப்படவேண்டும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31