குளியலறை சாதனங்கள், சுகாதார பராமரிப்பு சாதனங்கள் மற்றும் சமையலறை தீர்வுகளை வழங்குவதில் நிபுணத்துவம் பெற்றுள்ள Charter House International, உலகளாவில் பெயர்பெற்ற INDA குளியலறைச் சாதனங்களுக்கு இலங்கையில் ஏகபோக விநியோகத்தராகத் திகழ்ந்து வருகின்றது. 70 ஆண்டுகளுக்கு முன்னர் இத்தாலியில் ஸ்தாபிக்கப்பட்ட INDA, உலகப் போருக்குப் பின்னரான பொருளாதார எழுச்சி இடம்பெற்ற காலகட்டத்தில் குளியலறை சாதனங்களை உற்பத்தி செய்யும் நிறுவனமாகத் தொழிற்பட ஆரம்பித்தது. அதற்குப் பிறக்கு வந்த ஆண்டுகளில் குளியல் சுவர்கள், பொருத்தல் மூலங்கள் மற்றும் நிலைக்கண்ணாடிகள் போன்ற ஏனைய உற்பத்தி வரிசைகளையும் உற்பத்தி செய்ய ஆரம்பித்தது. குளியலறை தொடர்பான வரையறையற்ற பொருத்தல் தீர்வுகளை வழங்கும் தனித்தவொரு எண்ணக்கருவாக மாற்றம் கண்டது. 

தற்போது, குளியலறை சாதனத் துறையில் ஒரு தொழிற்துறைக் குழுமமாக INDA திகழ்ந்துவருவதுடன், சர்வதேச சந்தைகளில் உறுதியான, முன்னணி ஸ்தானத்தை வகித்து வருகின்றது. குளியலறை சாதனங்கள் (சந்தையில் INDA முன்னிலை வகித்து வருகின்றது, பொருத்தல் மூலங்கள், குளியல் சுவர்கள் மற்றும் நிலைக்கண்ணாடிகள் ஆகிய நான்கு பிரிவுகளில் அதன் உற்பத்திகளை வழங்கி வருகின்றது. 

INDA வடிவமைப்பு பல்வேறு அம்சங்களிலும் அதி சிறப்பு வாய்ந்தது. தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்ற புத்தாக்கம், ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி மீதான பாரிய முதலீடுகளின் பலனாக, பாரம்பரிய வடிவம் முதல் அதி நவீன வடிவமைப்புக்கள் வரை நவீன தீர்வுகளை கவர்ச்சியான வடிவமைப்புக்களில் INDA அறிமுகப்படுத்தி வருகின்றது. இந்த பன்முக அம்சங்களை உள்ளடக்கிய தனிச்சிறப்பானது, தனிமுத்திரை படைத்த படைப்பாக்கத்திறன், அசல் வடிவம் மற்றும் அதிசிறப்பான தோற்றம் ஆகியவற்றுடன் இணைந்து பிரமிக்கச் செய்கின்றது. பிறையோ~p, சிட்டேரியோ மற்றும் டூன் போன்ற உலகப்புகழ்பெற்ற கட்டடக் கலைஞர்கள் மற்றும் வடிவமைப்பாளர்களின் தீவிரமான பங்களிப்புடன் வடிவமைக்கப்படும் INDA உற்பத்திகள் தனித்துவம் வாய்ந்தவை. வாடிக்கையாளர்களின் வெவ்வேறுபட்ட தேவைகளுக்கு அமைவாக, அவர்களின் விருப்பத் தெரிவுகள் மற்றும் மாற்றமடைந்து வருகின்ற தேவைகளை தொடர்ச்சியாக வழங்கும் திறன் ஆழமாக வேரூன்றியுள்ள INDA, நீண்ட கால அனுபவத்தைக் கொண்டுள்ளது. இந்த தனித்துவமான திறனே நிறுவனம் நவீன போக்குகளில் முன்னிலை வகித்து, குளியலறைக்கு தேவையான ஒட்டுமொத்த தீர்வுகளையும் வழங்குவதற்கு ஏதுவாக உள்ளது. 

INDA உற்பத்திகள் அனைத்தும் நான்கு வடிவமைப்பு கொண்ட கருப்பொருளின் இணைப்பைக் கொண்டுள்ளன. புதிய பாரம்பரிய வடிவமைப்பானது (New Classic), கடந்த கால மற்றும் எதிர்கால இணைப்புப்பாலமாக, தற்போதைய காலத்தின் உற்சாக உணர்வாக, காலவரையறையற்ற நவீன பாணி கொண்ட தெரிவுகளுடன் பாரம்பரிய மூலங்களையும், நவீன பாணிகளையும் கொண்டுள்ளது. தொழிற்சாலை இலட்சண புதுப்பாணி வடிவமானது (Industrial shabby chic), ஆங்கிலத்தை தாய்மொழியாகக் கொண்ட உலகத்தைத் தாயகமாகக் கொண்டுள்ளதுடன், நவீன, அன்றாட பொருத்தல் வடிவங்களுடன் கச்சிதமாக பொருந்தும் தொழிற்சாலை மூலக்கூறுகளாக, கவர்ச்சியான தோற்றத்தைக் கொண்டுள்ளன. ஸ்கன்டிநேவிய நாடுகளிலிருந்து கிடக்கும் நோர்டிக் வடிவங்கள் (Nordic Style), இதமான, ஈர்ப்பைக் கொண்ட, மரத்திலான பொருத்தல் வடிவங்களுக்கு ஈடாக, தனித்துவமான அம்சங்களுடன், வெள்ளை, கறுப்பு மற்றும் பழுப்பு வண்ண கோடுகளுடன், பிரதானமாக சாம்பல் நிற சாயல்களுடன் எளிமையான ஆனால், தனித்துவமான படைப்புக்களாக உள்ளன. இறுதியாக நவீன வடிவமைப்பானது (Contemporary Design), நவீன வடிவங்களுடன் வரிக்கீலங்களுடன், ஈர்க்கும், ஆசுவாசப்படுத்தும் சூழலைத் தோற்றுவிக்கின்றன.    

சேர்ஜியோ பிறையோ~p அவர்களின் கைவண்ணத்தில் QAMAR, PROGETTO+ மற்றும் PERFETTO+ MAQ by INDA, LEA, NEW EUROPE, AVENUE, MITO, ONE, WALK IN, TEKNOAIR, SIM  மற்றும் TRENDY DESIGN  போன்றவை அடங்கலாக பல்வேறு உற்பத்தி வடிவங்களை Charter House காட்சியறையில் பெற்றுக்கொள்ள முடியும்.    

AIPL குழுமத்தின் ஒரு அங்கமான Charter House இல் INDA உற்பத்தி வரிசைகள் பிரத்தியேகமாகக் கிடைக்கப்பெறுகின்றன. 1989 ஆம் ஆண்டில் ஸ்தாபிக்கப்பட்ட Analytical Instruments Group (AIPL Group) ஆனது விஞ்ஞானம், சுகாதாரப் பராமரிப்பு, நீர்த் தொழில்நுட்பம், விவசாயம் மற்றும் ஆய்வுகூட தளபாடம் ஆகிய துறைகளில் பரந்த அளவிலான தொழில்நுட்ப மாற்றத் தேவைகளுக்கு தீர்வளித்துவருகின்ற, ஒட்டுமொத்த உயர் தொழில்நுட்ப தீர்வுகளை வழங்கும் ஒரு முன்னணி நிறுவனமாகும். இது 300 இற்கும் மேற்பட்ட பணியாளர்களைக் கொண்டுள்ளது. 

161, நாவல வீதி, நாரஹேன்பிட்டி என்ற முகவரியிலுள்ள Charter House தலைமை அலுவலகத்திற்கோ அல்லது 113, ஹவ்லொக் வீதி, கொழும்பு 5 என்ற முகவரியிலுள்ள காட்சியறைக்கோ விஜயம் செய்வதன் மூலமாக, அல்லது 0770495555 என்ற வாடிக்கையாளர் சேவை அழைப்பு இலக்கத்திற்கு அழைப்பை ஏற்படுத்துவதன் மூலமாக மேலதிக விபரங்களை, அறிந்துகொள்ள முடியும்.