திருகோணமலையில் அமைந்துள்ள எண்ணெய் தாங்கிகளை சோதனையிடுவதற்காக சென்ற இலங்கை பெற்றோலிய கூட்டு தாபனத்தின் அதிகாரிகள் நான்கு பேரை, இந்திய எண்ணெய் கூட்டுதாபனத்தின் அதிகாரிகள் சிலர் தடுத்து வைத்துள்ளனர். 

சோதனைக்கு சென்ற இலங்கை பெற்றோலிய கூட்டு தாபனத்தின் அதிகாரிகளை சுமார் அரை மணித்தியாலம் தடுத்து வைத்து பின்னர் விடுவித்துள்ளனர்.

இந்நிலையில் இச்சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.